
posted 19th May 2023
துயர் பகிர்வோ
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
நாளை சம்மாந்துறையில் பொன்விழாவும், பட்டமளிப்பும்
கிழக்கிலங்கையின் பிரபல அரபுக் கல்லூரியான சம்மாந்துறை தப்லீகுல் இஸ்லாம் அரபுக் கல்லூரியின் 50 ஆவது ஆண்டு நிறைவு பொன் விழாவும், 18ஆவது பட்டமளிப்பு நிகழ்வும் நாளை சனிக்கிழமை (20.05.2023) சிறப்பாக நடைபெறவிருக்கின்றது.
தப்லீகுல் இஸ்லாம் அரபுக் கல்லூரியின் தலைவர் அஷ்ஷெய்க் ஐ.எம். இஸ்மாயில் (தப்லீகி) தலைமையிலும் கல்லூரி அதிபர் அஷ்ஷெய்க் எஸ். இஸ்மாலெப்பை (தப்லீகி) முன்னிலையிலும் விழா நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.
சம்மாந்துறை பெரிய ஜும்ஆ பள்ளிவாசலில் நடைபெறவிருக்கம் இந்த பொன் விழா மற்றும் பட்டமளிப்பு நிகழ்வில் இலங்கைக்கான குவைத்தூதுவர் மேதகு கலப் எம்.எம். பூதஹீர் பிரதம அதிதியாகக் கலந்து கொள்ளவுள்ளார். மேலும், மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி அல் - ஹாபிழ் என்.எம். அப்துல்லா மஜ்லீஸ் அஸ்ஸ{றாவின் மேனாள் அமீரும், இராஜங்க அமைச்சின் மேனாள் செயலாளருமான அஷ்ஷெய்க் எம்.ஐ. அமீர், ஆகியோர் சிறப்பு அதிதிகளாகவும் கலந்து கொள்வர்.
அத்துடன் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.. நயிமுடீன், வெளிவிவகார அமைச்சின் மேலதிக செயலாளர் யூ.எல்.எம். ஜௌஹர், இறப்பர் அபிவிருத்தி திணைக்கள மேலதிக பணிப்பாளர் ஐ.எம். ஹனிபா, கிழக்கு மாகாண பிரதி பிரதம செயலாளர் ஏ. மன்சூர் கிழக்கு மாகாண பிரதி பிரதம செயலாளர் றிபா உம்மா ஜலீல், கிழக்கு மாகாண பேரவைச் செயலாளர் எம்.எம். நஸீர் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம். ஹனிபா, கிழக்கு மாகாண மேனாள் பிரதி பிரதம செயலாளர் ஐ.எம். ஹ{சைன் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொள்ளவுள்ளனர். விழாவில் ஷரீஆ பிரிவைச் சேர்ந்த 35 உலமாக்களும், ஹிப்ழுப் பிரிவைச் சேர்ந்த 10 ஹாபிழ்களும் பட்டம் வழங்கி கௌரவிக்கப்படுவதுடன், கொழும்பு, ஸம்ஸம் பவுன்டேசன் தவிசாளர் அஷ்ஷெய்க். எம்.எச். முஹம்மத் யூசுப் முப்தி பட்டமளிப்பு உரையும் ஆற்றுவார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)