
posted 30th May 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர - Special Offer
தேசோதய அமைப்பால் புத்தூர் விக்கினேஸ்வரா முன்பள்ளி மாணவர்களுக்கு உதவி
உரும்பிராய் கிழக்கை பிறப்பிடமாகும் கொலன்ட் நாட்டை வதிவிடமாகவும் கொண்ட திருமதி மு.லலிதாவின் நிதி அனுசரணையில் கோப்பாய் பிரதேச தேசோதய சபை ஊடாக புத்தூர் கிழக்கு ஶ்ரீ விக்னேஸ்வரா முன்பள்ளி மாணவர்களுக்கு சீருடைகள் மற்றும் சத்துணவுப் பொதிகளும் இன்று செவ்வாய்வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
கோப்பாய் பிரதேச தேசோதய தலைவர் இ மயில்வாகனம் தலமையில் இடம் பெற்ற இந் நிகழ்வில் இலத்திரனியல் பொறியியளாளரும் சமாதான நீதவானுமாகிய சா.தவசங்கரி, ஏற்ப்பாட்டாளர் தே.றமணதாஸ், ஆகியோர் கலந்து கொண்டு வழங்கி வைத்தனர்.
இதே வேளை அப்பகுதியில் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு உடு புடவைகளும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்வில் முன்பள்ளி ஆசிரியர்கள், முன்பள்ளி சிறார்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)