
posted 12th May 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
தேசிய ரீதியில் முதலிடம் பெற்ற குறும்பட இயக்குனர் கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டன
யாழ்ப்பாணம் தனியார் நிறுவனம் ஒன்றினால் நடாத்தப்பட்ட குறும்பட போட்டியில் மன்னார் மாவட்டத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு கவிவருமன் இயக்கிய உயிரைக் கொல்லும் என்ற தலைப்பின் கீழ் யாவரும் கேளிர் என்ற குறும்படத்திற்கு சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த ஒளிப்பதிவாளர் என்ற இரு பிரிவில் விருதுகளைப் பெற்றுள்ளார்.
மேலும், தேசிய ரீதியாக போட்டியிட்ட 63 குறும்படங்களில் போதைப்பொருள் தொடர்பான இவரது படமே முதலிடம் பெற்றுள்ளது.
குறித்த இளைஞனை கௌரவிக்கும் முகமாக புதன்கிழமை (10) மன்னார் மாவட்ட செயலகத்தில் மன்னார் மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமான திருமதி அ. ஸ்ரான்லி டி மெல் அவர்களின் தலைமையில் குறித்த பட இயக்குனருக்கும் மற்றும் படத்தில் நடித்த நடிகர்களுக்குமான கௌரவிப்பு நிகழ்வு நடைபெற்றது.
இந் நிகழ்வில் மாவட்ட செயலக பதவிநிலை உயர்நிலை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)