
posted 23rd May 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
துண்டுப் பிரசுரம்
நாட்டில் அண்மை காலமாக சிறுவர் கடத்தல் அதிகரித்துள்ளது. எனவே, பாடசாலை மாணவர்களை அவதானமாக செயல்பட அறிவுறுத்துமாறு ‘‘பாடசாலை மாணவர்களுக்கான அறிவித்தல்‘‘ எனும் தலைப்பில் துண்டுப் பிரசுரங்களை மட்டக்களப்பு பொலிஸார் விநியோகித்தனர்.
அந்த துண்டு பிரசுரத்தில், அதிபர்கள், ஆசிரியர்கள், பாடசாலை முடிந்தவுடன் மாணவர்கள் அநாவசியமாக வெளியில் நிற்காமல் வீட்டுக்கு உடன் செல்ல பணிப்புரை வழங்க வேண்டும். அத்துடன், அடையாந்தெரியாதவர்கள் உண்பதற்கு ஏதாவது கொடுத்தால் வாங்க வேண்டாம்‘‘ என அறிவுறுத்தியுள்ளனர்.
‘‘அடையாளந்தெரியாதோர் வாகனங்களில் ஏற்றிச் சென்று வீடுகளுக்கு விடுகின்றோம் என்றால் வாகனங்களில் ஏற வேண்டாம்‘‘ எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சந்தேகத்துக்கிடமாக யாராவது நடமாடினால்,
- பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கமான 119 இற்கு
அல்லது
- 065 222 4356, 065 222 4422
என்ற இலக்கத்துக்கு அறிவிக்குமாறு துண்டுபிரசுரத்தில்
சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)