தாரை வார்க்கும் ச‌தியா

உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

தாரை வார்க்கும் ச‌தியா

த‌மிழ்க்கூட்ட‌மைப்பின் க‌லைய‌ர‌ச‌ன் என்ப‌வ‌ரால் க‌ல்முனையை பிரிக்கும் வ‌ழ‌க்கு நீதிம‌ன்ற‌த்தில் உள்ள‌ நிலையில் இதற்கு எதிராக‌ ஓர் இடையீட்டு ம‌ணுவைக்கூட‌ செய்ய‌ முடியாம‌ல் ர‌வூப் ஹ‌க்கீமும் முஸ்லிம் காங்கிர‌சின் ச‌ட்ட‌த்த‌ர‌ணிக‌ளும் இருப்ப‌து ஏன்? க‌ல்முனையை த‌மிழ் கூட்ட‌மைப்பிடம் தாரை வார்க்கும் ச‌தியா அல்ல‌து ட‌ய‌ஸ்போராவிட‌ம் வாங்கிய‌ ப‌ண‌த்துக்கு இவ‌ர்க‌ளின் ந‌ன்றிக்க‌ட‌னா என‌ ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி கேள்வி எழுப்பியுள்ள‌து.

இது ப‌ற்றி க‌ட்சித்த‌லைவ‌ர் முபாற‌க் மௌல‌வி கூறிய‌தாவ‌து,

க‌ல்முனை பிர‌தேச‌ செய‌ல‌க‌ பிர‌ச்சினை என்ப‌து 1989ம் ஆண்டிலிருந்து வ‌ரும் பிர‌ச்சினையாகும். 1989 முத‌ல் முஸ்லிம் காங்கிர‌ஸ் க‌ட்சியே க‌ல்முனை தொகுதியை ஆட்சி செய்து வ‌ருகிற‌து. அக்க‌ட்சி இத‌ய‌ சுத்தியுட‌ன் செய‌ற்பட்டிருந்தால் க‌ல்முனை பிர‌ச்சினையை எப்போதோ தீர்த்து க‌ல்முனையில் த‌மிழ், முஸ்லிம் ஒற்றுமையை நிலைநாட்டியிருக்க‌ முடியும்.

அப்போதெல்லாம் புலிக‌ள் ப‌ல‌த்துட‌ன் இருந்ததால் எம்மால் முடிய‌வில்லை என‌ முஸ்லிம் காங்கிர‌சின‌ர் சொல்கிறார்கள். அப்ப‌டியாயின் புலிக‌ள் ஒழிக்க‌ப்ப‌ட்ட‌ 2009 க்கு பின் ஹ‌க்கீமும், முஸ்லிம் காங்கிர‌சின‌ரும் க‌ல்முனை பிர‌ச்சினையை தீர்க்க‌ என்ன‌ செய்த‌ன‌ர் என‌ கேட்கிறோம். இது ப‌ற்றிய‌ ப‌கிர‌ங்க‌ விவாத‌த்துக்கு எம்முட‌ன் ஹ‌க்கீம் வ‌ரும் துணிச்ச‌ல் அவ‌ருக்கு இருக்கிற‌தா என‌ கேட்கிறோம்.

க‌ல்முனை கொதிப்ப‌டைந்துள்ள‌ நிலையிலும் ர‌வூப் ஹ‌க்கீம் க‌ல்முனைக்கெதிரான‌ ச‌ம்ப‌ந்த‌ம் கோஷ்டியுட‌ன் புரியாணி சாப்பிடுவ‌தில்தான் க‌வ‌ன‌மாக‌ இருக்கிறார்.

இந்த‌ ம‌னுவுக்கெதிராக‌ இடையீட்டு ம‌ணுவை தாக்க‌ல் செய்ய‌ ச‌ட்ட‌த்த‌ர‌ணியான‌ ஹ‌க்கீம் முன் வ‌ர‌வுமில்லை. அத‌ற்காக‌ செல‌வு செய்து ச‌ட்ட‌த்த‌ர‌ணிக‌ளை நிய‌மிக்க‌வுமில்லை. ஆனால், தேர்த‌ல் ஒன்று வ‌ந்தால் கோடிக்க‌ன‌க்காண‌ ப‌ண‌த்துட‌ன் வ‌ந்திற‌ங்குவார். க‌ல்முனை உசார் ம‌டைய‌ர்க‌ளும் "போர்ரா பாட்ட‌" என‌ ஹ‌க்கீமுட‌ன் சேர்ந்து கூத்த‌டிப்பார்கள்.

க‌ப்முனை பிர‌ச்சினையை தீர்க்க‌ ப‌ல‌ ச‌ந்த‌ர்ப்ப‌ங்க‌ள் ஹ‌க்கீமுக்கு இருந்த‌ன‌. 2010 தேர்த‌லின் பின் ஹ‌க்கீம் க‌ள்ள‌ கோஷ்டியின‌ர் ம‌ஹிந்த‌விட‌ம் ச‌ர‌ண‌டைந்து ப‌த‌விக‌ளைப் பெற்ற‌ போது, யுத்த‌ம் முடிந்த‌ நிலையில் மிக‌ இல‌குவாக‌ க‌ல்முனை பிர‌ச்சினையை தீர்த்திருக்க‌லாம். ம‌ஹிந்த‌விட‌ம் ந‌க்குண்டு கொண்டே அவ‌ருக்கு எப்ப‌டி குழி ப‌றிக்க‌லாம் என்றே முஸ்லிம் காங்கிர‌ஸ் த‌லைவ‌ர் திட்ட‌ம் தீட்டினாரே த‌விர‌, க‌ல்முனை பிர‌ச்சினையை த‌மிழ் ப‌ய‌ங்க‌ர‌வாதிக‌ளுக்கு எதிரான‌ ம‌ஹிந்த‌வை வைத்து மிக‌ இல‌குவாக‌ தீர்க்க‌ முடிந்திருந்தும் அத‌ற்கு முன் வ‌ர‌வில்லை.

மஹிந்த ராஜபக்சவுக்கு 18ஆவது திருத்தத்துக்கு ஆதரவு வழங்கும் போது பஷீர் சேவுதாவுத் சொன்ன எம். பிமார் ஒவ்வொருவ‌ருக்கும் ஒரு கோடி ரூபா பணத்தை பெறாமல் கல்முனைப் பிரச்சினையை தீர்த்து தாருங்கள் என்ற நிபந்தனையோடு இதை ஏன் ஹ‌க்கீமும் ம‌ற்றோரும் பார்க்க‌வில்லை என்று கேட்கிறோம்.

2015ல் ந‌ல்லாட்சி அர‌சில் ரிசாத் ப‌தியிதீன் எந்த‌ ச‌மூக‌ நிப‌ந்த‌னையும் இன்றி மைத்திரிக்கு காவ‌டி தூக்கிய‌தை பார்த்து முஸ்லிம் காங்கிர‌சும் பாய்ந்து காவ‌டி தூக்கிய‌ போது க‌ல்முனை பிர‌ச்சினையை தீர்க்கும் ஒப்ப‌ந்த‌த்தை ஏன் எழுத‌வில்லை.?

மைத்திரியை முத‌லில் ஆத‌ரித்த‌து ம‌க்க‌ள் காங்கிர‌ஸ் த‌லைவ‌ர் ரிசாத் ப‌தியுதீன். அத‌ன்பின் அவ‌ருக்கான‌ முத‌ல் ஆத‌ர‌வுக் கூட்ட‌த்தை க‌ல்முனை ம‌க்க‌ள் மிக‌ப் பிர‌ம்மாண்ட‌மாக‌ ந‌ட‌த்தின‌ர். அத்த‌கைய‌ க‌ல்முனை ம‌க்க‌ளின் பிர‌தேச‌ செய‌ல‌க‌ பிர‌ச்சினையை மைத்திரியின் ஆட்சியில் அமைச்ச‌ராக‌ இருந்த‌ ரிசாத் ப‌தியுதீனும் தீர்க்க‌ முய‌ல‌வில்லை. இவ‌ர்க‌ள் அனைவ‌ரும் மைத்திரி ஜ‌னாதிப‌தி ஆன‌வுட‌ன் ப‌த‌வி, ப‌த‌வி என்று ப‌த‌விக‌ளையே பெற்ற‌ன‌ர்.

மைத்திரியை ஆத‌ரிப்ப‌துதான் ஆத‌ரிக்கிறீர்க‌ள். ச‌மூக‌த்தின் பிர‌ச்சினைக‌ளை முன் வைத்து ஒப்ப‌ந்த‌ம் செய்யுங்க‌ள் என‌ உல‌மா க‌ட்சி ப‌கிர‌ங்க‌ அறிக்கை விட்டும் இவ‌ர்க‌ளுக்கு ஏற‌வில்லை.

இவ்வாறு ப‌ல‌ ச‌ந்த‌ர்ப்ப‌ங்க‌ள் இருந்தும் முஸ்லிம் காங்கிர‌சும் அ.இ. ம‌க்க‌ள் காங்கிர‌சும், அதாவுள்ளாவும் க‌ல்முனையை பிர‌ச்சினையை தீர்க்காம‌ல் இத‌னை வைத்தே அர‌சிய‌ல் பிழைப்பு ந‌ட‌த்துவ‌தால் ந‌ம‌க்கு இவ‌ர்க‌ள் எவ‌ரும் வேண்டாம் என்றும், க‌ல்முனை ம‌க்க‌ள் புதிய‌ க‌ட்சியில் ஒன்றிணைவ‌த‌ன் மூல‌மே க‌ல்முனை பிர‌ச்சினையை இத‌ய‌ சுத்தியுட‌ன் தீர்க்க‌ முடியும் என்ப‌தை ப‌ல‌ கால‌மாக‌ சொல்லி வ‌ருகிறோம்.

க‌ல்முனை பிர‌ச்சினையை தீர்க்க‌ ர‌வூப் ஹ‌க்கீம் முன் வ‌ர‌மாட்டார் என்ப‌தால் இது விட‌ய‌த்தில் எம‌து க‌ட்சி உத‌வ‌ வேண்டும் என்ப‌த‌ற்காய் தேர்த‌ல் திணைக்க‌ள‌த்தில் அங்கீகார‌ம் பெற்ற‌ எம‌து ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சியின் த‌லைமைப் ப‌த‌வியை த‌ற்காலிக‌மாக‌ பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ர் ஹ‌ரீசுக்கு விட்டுக் கொடுக்க‌வும் த‌யார் என‌ நேர‌டியாக‌வும் நான் சொல்லியிருந்தேன். ஆனாலும், அவ‌ர் அத‌ற்கு உட‌ன்ப‌டாம‌ல், க‌ட்சி என்றும் ஹ‌க்கீமின் த‌லைமை என்றும் இருந்த‌தால் இன்று ஏமாந்த நிலையிலும் க‌ல்முனையை ப‌றிகொடுக்கும் நிலையிலும் உள்ளார்.

ஆக‌வே, முஸ்லிம்க‌ள் குறிப்பாக‌ கிழ‌க்கு மாகாண‌, க‌ல்முனை முஸ்லிம் பொதும‌க்க‌ள் அர‌சிய‌லில் விழிப்ப‌டைய‌ வேண்டும். ப‌ல‌ வ‌ருட‌ங்க‌ளாக‌ த‌ம்மை ஏமாற்றும் முஸ்லிம் காங்கிர‌ஸ், அ.இ. ம‌க்க‌ள் காங்கிர‌ஸ், தே. காங்கிர‌ஸ் ஆகிய‌ சுய‌ போக ஏமாற்று க‌ட்சிக‌ளை நிராக‌ரித்து க‌ல்முனைக்காக‌ எப்போதும் குர‌ல் த‌ரும் ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சியை ப‌ல‌ப்ப‌டுத்த‌ முன் வ‌ராவிட்டால் க‌ல்முனை ப‌றி போவ‌தை அர‌சிய‌ல் ரீதியில் த‌டுக்க‌ முடியாது போய்விடும் என‌ எச்ச‌ரிக்கிறோம்.

தாரை வார்க்கும் ச‌தியா

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)