
posted 19th May 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
தமிழ் இனப்படுகொலையின் 14 ஆம் ஆண்டு நினைவேந்தல்
தமிழ் இனப்படுகொலையின் 14 ஆம் ஆண்டு நினைவேந்தல் நேற்று முன் தினம் தமிழர்கள் வாழும் தேசமெங்கும் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டது.
இதன் ஒரு அங்கமாக முள்ளிவாய்க்கால் பகுதியில் அமைந்துள்ள புனித சின்னப்பர் ஆலயத்தில் போரில் உயிரிழந்த மக்களுக்காக இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டன.
அருட்தந்தையால் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டதுடன் ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்ட கல்லறைகளில் சுடர் ஏற்றி வணக்கம் செலுத்தப்பட்டது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)