
posted 8th May 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
தன்செல் நிகழ்வு
வெசாக் வாரத்தை முன்னிட்டு நிந்தவூர் பொலிஸார் தன்செல் எனும் அன்னதான நிகழ்வு ஒன்றினை சிறப்பாக நடத்தினர்.
நிந்தவூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஐ.எல். நஜீப் தலைமையில் நிந்தவூர் பிரதான வீதியில் இந்த அன்னதான நிகழ்வு இடம்பெற்றது. பிரதான வீதியூடாக பயணித்த பொது மக்களுக்கும், விவசாயிகளுக்கும் இதன் போது குளிர் பானங்கள், காலை ஆகாரம் என்பன வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் நிந்தவூர் ஜும்ஆப்பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை தலைவர் அல் ஹாஜ் பாறூக் இப்றாஹிம், நிந்தவூர் பொலிஸ் நிலைய ஆலோசனைக் குழுவின் தலைவர் ஏ.எம். றஸீன் நிந்தவூர் அல் மஸ்லம் வித்தியாலய அதிபர் இஸட் அஹமட், பிர்தௌஸ் ஜும்ஆப்பள்ளிவாசல் பிரதம இமாம் மௌலவி சிம்லி உட்பட பல பிரமுகர்களும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
நிந்தவூர் பொலிஸ் நிலையத்தின் இந்த ஏற்பாடு வெகு சிறப்பாக இடம்பெற்றமைக்கு பலரும் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)