
posted 31st May 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர - Special Offer
டெங்கு ஏற்படும் அபாயம் - அசையாத அதிகாரிகள்
மட்டக்களப்பு நகரில் குடிமனைகளை ஊடறுத்துச் செல்லும் வடிகான்களில் புதர்கள் வளர்ந்து கழுவு நீர் வழிந்தோட முடியாமல் தேங்கி நிற்பதால், டெங்கு நுளம்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே, தமது வீடுகளில் தேங்காய் சிரட்டை மற்றும் ரின்களை தேடுவதை சுகாதார அதிகாரிகள் விட்டுவிட்டு, இந்த வடிகானில் நீர் தேங்கி நிற்பது தொடர்பாக மாநகர சபைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கடும் விசனம் தெரிவிக்கின்றனர்.
மட்டக்களப்பு நகரில் ஆசிரியர் கலாசாலைக்கு அருகில் இருந்து ஆரம்பிக்கும் இந்த பெரிய வடிகான், 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட குடிமனைகளை ஊடறுத்து, பொற் தொழிலாளர் வீதி ஊடாக கல்லடி வாவியைச் சென்றடையும் சுமார் ஒரு கிலோமீற்றருக்க அதிகமான தூரத்தைக் கொண்டுள்ளது.
வடிகானில் மரங்கள் வளர்ந்துள்ளதுடன், கழிவுப் பொருட்கள் குவிந்துள்ளதால் கழிவு நீர் வழிந்தேட முடியாமல் தேங்கி நிற்கின்றது.
இதனால் டெங்கு நுளம்பு மற்றும் விஷப் பாம்புகள் வடிகானுக்கு அருகிலுள்ள வீடுகளுக்குள் நுழைவதுடன் டெங்கு ஏற்படக்கூடிய நிலையும் தோன்றியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக கவலை தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டுவந்தபோதும் எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், டெங்கு நுளம்பை ஒழிப்பதாக தமது வீடுகளுக்கு வரும் பொதுச் சுகாதார அதிகாரிகள், இந்த வடிகானில் டெங்கு நுளம்பு வளர்க்கும் மாநகர சபைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பார்களா என பொதுமக்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)