
posted 12th May 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
சிறுவர்களை கடத்தில் முயற்சியில் இரு சந்தேக நபர்களுக்கு எதிராக நான்கு வழக்குகள் தாக்கல்
தலைமன்னார் பகுதியில் மாணவிகளை கடத்த முற்பட்டதாக தெரிவிக்கப்பட்டு கைது செய்யப்பட்ட இரு சந்தேக நப்ர்களுக்கு நான்கு வழக்குகள் தலைமன்னார், மன்னார் பொலிசாரால் மன்னார் நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மன்னார் பகுதியில் கடந்த ஓரிரு தினங்களாக பாடசாலை மாணவர்கள் மீது வெள்ளை வேனில் வருபவர்கள் குறிவைத்து கடத்துவதற்கு எத்தனித்து வருகின்றார்கள் என்ற பதட்ட நிலையில் கடந்த வியாழக்கிழமை (11) மாலை தலைமன்னார் பகுதியில் வெள்ளை வேனில் சொக்கிலேற் பிஸ்கட் விற்பனைக்காக வந்த இருவர் மூன்று சிறுமிகளுக்கு சொக்கிலேற் தருவதாக அழைத்தாகவும் இதனால் இவர்களை கண்டு இந்த சிறுமிகள் பயத்தில் ஓடி ஒழிந்ததாகவும், இதனால் இந்த சிறுமிகளை இந்த வியாபாரிகள் தேடிச் சென்று கடத்த முற்பட்டதாகவும், இதனால் இச் சந்தேக நபர்களை கிராம மக்கள் மடக்கி பிடித்து தலைமன்னார் பொலிசில் ஒப்படைத்திருந்தனர்.
சிறுமிகளின் முறைப்பாட்டில் இந்த வாகனத்தில் மூவர் இருந்ததாகவும் அதில் ஒருவர் வெளிநாட்டவராக இருந்ததாகவும் தெரிவித்திருந்தனர்.
இருந்தபோதும் இந்நாட்டு இருவரே கிராம மக்களால் பிடிக்கப்பட்டிருந்தனர். இந்த சந்தேக நபர்கள் தொடர்பாக எதாவது முறைப்பாடுகள் வேறு பொலிஸ் நிலையங்களில் முறைபாடுகள் பதியப்பட்டிருக்கின்றதா என ஆராயந்தபோது
மன்னார் பொலிஸ் நிலையத்தில் சிறுவர்களை கடத்த முற்பட்டதாக மூன்று முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டிருந்தது என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இந்த இரு சந்தேக நபர்களையும் தலைமன்னார் பொலிசார் மன்னார் நீதவான் நீதிமன்றில் இன்று வெள்ளிக்கிழமை (12) முன்னிலைப்படுத்தியிருந்தனர். அப்பொழுது இவர்களை இவ் வழக்கு தொடர்பாக எதிர்வரும் 18.05.2023 விளக்கமறியலில் வைக்கும்படி நீதவான் கட்டளைப் பிறப்பித்திருந்தார்.
இதே நேரத்தில் மன்னார் பொலிசாரும் இந்த சந்தேக நபர்களுக்கு எதிராக மூன்று வழக்குகளை இந்த சந்தர்ப்பத்தில் இதே நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.
அதாவது, 2023.05.06 ந் திகதி மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை 11 வயதுடைய மாணவனை கடத்த முற்பட்டதாகவும்
இதில் இந்த சந்தேக நபர்கள் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதாக மன்றில் மன்னார் பொலிசார் தெரிவித்ததைத் தொடர்ந்து 2023.05.19 ந் திகதி வரை இவ் வழக்கில் விளக்க மறியலில் வைக்க நீதவான் கட்டளைப் பிறப்பித்ததுடன் அடையாள அணிவகுப்புக்கும் கட்டளை பிறப்பித்தார்.
இவ்வாறு 2023.05.08 ந் திகதி ஓலைத்தொடுவாய் பகுதியில் ஒரு சிறுமியை கடத்த முற்பட்டதாகவும் இவ்வாறு மன்னார் பொலிசில் மூன்று முறைப்பாடுகள் இவர்களுக்கு எதிராக வைக்கப்பட்டபோது மூன்றாவது வழக்குக்கு எதிர்வரும் 22.05.2023 வரை இவர்களை விளக்கமறியலில் வைக்கும்படி நீதவான் கட்டளை பிறப்பித்ததார்.
இந்த வழக்கிலும் இச்சந்தேக நபர்களை அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்த நீதவான் கட்டளை பிறப்பித்துள்ளார்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)