
posted 5th May 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
சிறீ சபாரத்தினத்தின் 37வது நினைவேந்தல்
தமிழ் ஈழ விடுதலை இயக்கமான ரெலோ (TELO) அமைப்பின் முன்னாள் தலைவர் சிறீ சபாரத்தினத்தின் நினைவேந்தல் நிகழ்வு இன்று (05) மட்டக்களப்பிலுள்ள கட்சியின அலுவலகத்தில் நடைபெற்றது.
ரெலோ அமைப்பின் முன்னாள் தலைவராக இருந்த சிறீ சபாரத்தினத்தின் நினைவு நாள் நிகழ்வுகள் இன்று (05) தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ)வின் செயலாளர் நாயகமும், பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா)வின் தலைமையில் நடைபெற்றது.
இந் நினைவேந்தல் நிகழ்வில் சபாரத்தினத்தின் உருவப் படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு, பொதுச் சுடர் ஏற்றப்பட்டு, மலர் துாவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்வில் கட்சியின் பிரதித் தலைவர் இந்திரகுமார் பிரசன்னா, மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி முதல்வர், மண்முனை தென் எருவில் பற்று தவிசாளர், மற்றும்முன்னாள் உறுப்பினர்கள், கட்சியின் உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)