
posted 16th May 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
சட்டவிரோதக் கும்பலை தடுத்து நிறுத்த வேண்டும். சூளுரைக்கும் இராஜாங்க அமைச்சர்
மன்னார் மாவட்டத்தில் மணல் அகழ்வு, விவசாய காணி அபகரிப்பு விடயத்தில் ஒரு சில கும்பல்கள் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதால் வன்னி பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட நாம் யாவரும் ஒன்றிணைந்து இப் பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க என வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் , இராஜாங்க அமைச்சரும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான காதர் மஸ்தான் அழைப்பு விடுத்துள்ளார்
மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அண்மையில் நடைபெற்ற வன்னி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கும் இடையே நடைபெற்ற கருத்து பரிமாற்றத்தின் போது காதர் மஸ்தான் தொடர்ந்து தெரிவிக்கையில்;
இந்த கூட்டத்தில் மன்னார் கட்டுக்கரைக்குளம் சம்பந்தமாக பிரஸ்தாபிக்கப்பட்டது. இவ்விடயம் மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும் பேசப்பட்டவையே. விவசாய அமைச்சின் கீழ்தான் கிராமிய பொருளாதார அமைச்சு அதாவது நான் பதவி வகிக்கும் இராஜாங்க அமைச்சு இருக்கின்றது. விவசாயத்துறை சம்பந்தமாக என்னைக் கவனிக்கும்படி தெரிவிக்கப்பட்டுள்ளதால் நான் இந்த கட்டுக்கரைக்குளம் தொடர்பாக விரைவாக நடவடிக்கை எடுக்க இருக்கின்றேன்.
நான் ஆளும் கட்சியில் இருந்தாலும் மாவட்ட மக்களுக்கு எதிராக அரசு எதாவது நடவடிக்கை எடுத்தாலும் நான் அதை எதிர்ப்பேன்.
மன்னார் மாவட்டத்தில் மணல் அகழ்வு, விவசாய காணி அபகரிப்பு விடயத்தில் ஒரு சில கும்பல்கள் இருந்து கொண்டு சில சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவது தெரிந்த விடயம்.
நாங்கள் இது தொடர்பாக பொலிஸ் உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடி இதற்கான நடவடிக்கை எடுக்க இருக்கின்றோம். இன்றைய ஜனாதிபதியிடம் ஆளும் கட்சி, எதிர் கட்சி என்று இல்லை.
ஆகவே, எமது மாவட்டத்தின் நலன் கருதி நாம் ஆளும் கட்சி, எதிர் கட்சி என்று இல்லாது எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் யாவரும் ஒன்றிணைந்து மாவட்ட அபிவிருத்தியை முன்னெடுக்க வேண்டும். இங்குள்ள சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு வரும் கும்பலுக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என காதர் மஸ்தான் உறுதிபூண்டார்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)