
posted 8th May 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
குழாய் கிணறுகள் வழங்கிவைப்பு
கல்முனை ரஹ்மத் பவுண்டேஷன் அமைப்பினால் பொத்துவில் பிரதேசத்தில் இனங்காணப்பட்ட தேவையுடைய பயனாளர்களுக்கு குழாய்க் கிணறுகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
பொத்துவில் பிரதேசத்தில் தொடர்ச்சியாக இருக்கின்ற குடிநீர்ப்பிரச்சினையை நிவர்த்திசெய்யும் முகமாக முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்ட சில பயனாளர்களுக்கு குழாய்க் கிணறுகள் அமைத்துத் தருமாறு ரஹ்மத் பவுண்டேஷன் அமைப்பின் பொத்துவில்லுக்கான அமைப்பாளர் புகாரிதீன் பஷூர்கான் ஊடாக விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக YWMA பேரவையின் அனுசரணையில், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய ஒருங்கிணைப்புச் செயலாளரும், கல்முனை ரஹ்மத் பவுண்டேஷன் அமைப்பின் ஸ்தாபகருமான ரஹ்மத் மன்சூர் அவர்களினால் மிகவும் குறுகிய நாட்களுக்குள் இக் குழாய்க் கிணறுகளை கட்டிமுடித்து அம்மக்கள் பாவனைக்காக உத்தியோகபூர்வமாக திறந்து கையளித்து வைத்தார்.
இதன்போது ரஹ்மத் பவுண்டேஷன் உறுப்பினர்களுடன் பயனாளர்கள், பொத்துவில் பிரதேச மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
மேலும், கல்முனை ரஹ்மத் பவுண்டேஷன் அமைப்பானது அம்பாறை மாவட்டத்தில் பல்வேறு மக்கள் நலன்சார் சேவைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)