கிழக்கிலிருந்து ஆரம்பமாகவுள்ள விமானச் சேவை

உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

கிழக்கிலிருந்து ஆரம்பமாகவுள்ள விமானச் சேவை

கிழக்கு மாகாணத்தில் சுற்றுலா மற்றும் முதலீடுகளை மேம்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் விமான சேவையை உடனடியாக ஆரம்பிப்பது குறித்து சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வாவுக்கும், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும் இடையில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.

கிழக்கு மாகாணத்தில் காணப்படும் இரண்டு விமான நிலையங்கள் மற்றும் பல கடல் விமானங்கள் இறங்கும் தளங்கள் பயன்படுத்தப்படாமல் உள்ளமை குறித்து அமைச்சரின் கவனத்துக்கு ஆளுநர் கொண்டுவந்ததையடுத்து விமானச் சேவைகளை ஆரம்பிக்க ஏற்பாடு செய்வதாக அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

இக்கலந்துறையாடலில் கிழக்கு மாகாண பிரதம செயலாளர், சிவில் விமான போக்குவரத்து அமைச்சின் செயலாளர் , விமானப் போக்குவரத்து பணிப்பாளர், சுற்றுலாப் பணியகப் பணிப்பாளர், விமானப்படை அதிகாரிகள், தனியார் விமான சேவையாளர்கள் கலந்துகொண்டனர்.

மேலும், சினமன் எயார் தனது விமானசேவையை ஜூலை மாதத்திலிருந்து ஆரம்பிப்பதாக உறுதியளித்தது. அதை ஊக்குவிக்க கிழக்கு மாகாண சுற்றுலாப் பணியகம் தனது முழுமையான ஆதரவை அளிப்பதாக தெரிவித்தது.

கிழக்கிலிருந்து ஆரம்பமாகவுள்ள விமானச் சேவை

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)