
posted 31st May 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர - Special Offer
காணாமல் போனோருக்கான நடமாடும் சேவை
திருகோணமலை மாவட்டம் தம்பலகாமம் பிரதேச செயலக பகுதியில் காணாமல் போன ஆட்கள் பற்றிய விசாரணை தொடர்பான நடமாடும் சேவை தம்பலகாமம் பிரதேச செயலக மண்டபத்தில் இடம் பெற்றது. குறித்த நடமாடும் சேவையை காணாமல்போன அலுவலகம் முன்னெடுத்திருந்தது.
காணாமல் போனவர்களின் உறவுகள் தங்களது சாட்சியோடு காணாமல் போனோர் ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்தனர்.
இதில், கிண்ணியா, கந்தளாய், தம்பலகாமம் ஆகிய பிரதேச பகுதிகளை உள்ளடக்கியவர்களில் சுமார் 40 க்கும் மேற்பட்டோர்கள் கலந்துகொண்டு சாட்சியங்களை வழங்கினர்.
இதில் காணாமல் போனோர் அலுவலகத்தின் உயரதிகாரிகள், தம்பலகாமம் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் எனப் பலர் கலந்து கொண்டனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)