
posted 29th May 2023

அன்னாரின் இழப்பினால் தாங்கொணாத் துயரில் வாடும் அனைவருக்கும் தேனாரத்தின் ஆழ்ந்துள்ள அனுதாபங்கள்
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர - Special Offer
கதிர்காம பாதையாத்திரையில் ஈடுபட்டவர் சடலமாக மீட்பு
கதிர்காமத்திற்கு சந்நிதியில் இருந்து பாதயாத்தரை மேற்கொண்டு மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலையத்தை வந்தடைந்த யாத்திரிகரில் ஒருவர் இன்று திங்கட்கிழமை (29) ஆலயத்தில் உயிரிழந்துள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணம் கைதடி மத்திய வீதியைச் சேர்ந்த 74 வயதுடைய இராசையா சிவலிங்கம் என்பவரே இவ்வாறு உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கடந்த 6ம் திகதி கதிர்காமத்துக்கான பாதயாத்திரை யாழ் சந்நிதி முருகன் ஆலயத்தில் ஆரம்பித்த பாதயாத்திரை குழுவில் பங்கேற்று நேற்று ஞாயிற்றுக் கிழமை (28) திகதி இரவு மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலையத்தை வந்தடைந்து ஆலய வளாகத்தில் தங்கியிருந்துள்ளனர்.
இந்த நிலையில் இன்று காலையில் குறித்த நபர் பணிஸ் உண்ட பின்னார் அமர்ந்திருந்த நிலையில் திடீரென நிலத்தில் சரிந்து வீழ்ந்ததையடுத்து அவர் உயிரிழந்துள்ளார் என பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது..
இதனையடுத்து பிரேத பரிசோதனைக்காக சடலத்தை மட்டு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தவைமையக பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)