
posted 16th May 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
கசிப்புடன் 4 பேர் கைது
34 லீற்றர் கசிப்புடன் பெண் உட்பட நால்வரை கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் பொறுப்பதிகாரி எச். எம். சியாம் தெரிவித்துள்ளார்.
காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நொச்சிமுனையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துமிந்த நயனசிறியின் வழிகாட்டலில் மாவட்ட இரகசிய தகவல் பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்த நடவடிக்கையின் போது நீர் நிலைக்குள் மறைத்து வைக்கப்பட்ட 34 லீற்றர் கசிப்பு கைப்பற்றப்பட்டது. அத்துடன், பெண் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டனர்.
கைதானவர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)