எழுத்தாளர் அனிஸ்டஸ் ஜெயராஜா காலமானார்
எழுத்தாளர் அனிஸ்டஸ் ஜெயராஜா காலமானார்

அன்னாரின் இழப்பினால் தாங்கொணாத் துயரில் வாடும் அனைவருக்கும் தேனாரத்தின் ஆழ்ந்துள்ள அனுதாபங்கள்

உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

எழுத்தாளர் அனிஸ்டஸ் ஜெயராஜா காலமானார்

பிரபல எழுத்தாளரும், பன்னூலாசிரியருமான, திருகோணமலையைப் பிறப்பிடமாகக் கொண்ட அனிஸ்டஸ் ஜெயராஜா தனது 65 ஆவது வயதில் கடந்த புதன் கிழமை (10) காலமானார்.

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மறைந்த ஸ்தாபகத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான மர்ஹ{ம் எம்.எச்.எம். அஷ்ரபின் அரசியல் எழுச்சியில் தமது எழுத்தாளுமை ஊடாக முக்கிய வகிபாகமாகத் திகழ்ந்த அனிஸ்டஸ் ஜெயராஜ் மர்ஹ{ம் அஷ்ரபின் வரலாற்று நூலை எழுதி வெளியிட்டதுடன் “அஷ்ரபின் அந்த ஏழு நாட்கள்” எனும் முக்கிய நூலையும் வெளியிட்டார். 27 நூல்களை எழுதியுள்ள அவர் 1979 ஆம் ஆண்டு சேகுவரா எனும் முதலாவது நூலை வெளியிட்டிருந்தார்.

எழுத்தாற்றல் மூலம் கின்னஸ் உலக சாதனைக்கு முயற்சி செய்த பன்முக சமூக, ஆய்வு எழுத்தாளரான அனிஸ்டஸ் ஜெயராஜா, “அஷ்ரபின் அந்த ஏழு நாட்கள், அஷ்ரப் பெருக்கெடுத்த கதைகள், தலைவன் எம்.எச்.எம். அஷ்ரப்” சிறீலங்காவில் முஸ்லிம்கள் வரலாறு, சிறீலங்காவில் முஸ்லிம்களின் இருப்பும் உறவும், முஸ்லிலிம்கள் மீதான தேசிய நெருக்கடிகள், இந்தியாவே நீயுமா, எனது தேசம் எனது மக்கள் என்பன உள்ளிட்ட 27 நூல்களை எழுதியுள்ளதோடு, அவற்றில் 25 நூல்களை வெளியிட்டுமுள்ளார்.

அன்னாரின் மறைவு தொடர்பில் பல்வேறு தரப்பினரும் ஆழ்ந்த அனுதாபங்களை வெளியிட்டு வருகின்றனர்.

எழுத்தாளர் அனிஸ்டஸ் ஜெயராஜா காலமானார்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)