
posted 31st May 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர - Special Offer
எரிபொருள் தட்டுப்பாட்டிற்கு எரிபொருள் விலை குறையலாம் என்பதாலோ?
அம்பாறை மாவட்டத்தில் எரிபொருட்களுக்கு திடீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமையினால் வாகன உரிமையாளர்கள் பெரும் அவலங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
குறிப்பாக பெற்றோல், டீசல் முதலான எரிபொருட்களுக்கு இந்த மாவட்டத்தில் உள்ள பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
மாவட்டத்தின் ஒரு சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருட்கள் விநியோகிக்கப்பட்ட போதிலும் இன்று புதன் கிழமை (31) நீண்ட கியூ வரிசைகள் காணப்பட்டன.
இலங்கையில் எரிபொருட்களுக்கு குறிப்பாக பெற்றோல், டீசல் விலை குறைக்கப்படலாம் என்ற தகவல் பரவியதையடுத்தே இந்த திடீர் தட்டுப்பாடு ஏற்படக் காரணம் என கூறப்படுகின்றது.
இந்த விலைக்குறைப்பு அச்சம் காரணமாக பல எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் உரிய காலத்தில் எரிபொருள் கொள்வனவு செய்வதனை திடீரென நிறுத்தியுள்ளமையே இத்தட்டுப்பாட்டிற்கு காரணம் எனவும் தெரிய வருகின்றது.
இந்த நிலையால் வாகன உரிமையாளர்கள் மட்டுமன்றி அவசர பயணங்களை மேற்கொள்ள வேண்டிய பொது மக்களும் பெரும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)