
posted 27th May 2024
உறவுகளின் துயர் பகிர்வு
உளவு இயந்திரங்கள் வழங்கிவைத்த ஆளுநர் செந்தில் தொண்டமான்
கிழக்கு மாகாணத்தில் உள்ள உள்ளூராட்சிமன்றங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் திண்மக் கழிவுகளை அகற்றவும் விவசாயத்தை மேம்படுத்தவும் ஆளுநர் செந்தில் தொண்டமானால் இயந்திரங்கள் மற்றும் உளவு இயந்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் பிரதம செயலாளர் R.M.P.S ரத்நாயக்க,ஆளுநரின் செயலாளர் L.P மதநாயக்க, உள்ளூராட்சி திணைக்கள ஆணையாளர் மணிவண்ணன், விவசாய அமைச்சின் செயலாளர் முத்துபண்டா ஆகியோர் கலந்துகொண்டனர்.
திருகோணமலையில் உள்ள ஆளுநர் அலுவலக வளாகத்தில் வைத்து இந்த உளவு இயந்திரங்கள் கையளிக்கப்பட்டன.

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)