இழுத்த‌டிக்கும் ச‌தி

உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

இழுத்த‌டிக்கும் ச‌தி

மாகாண‌ ச‌பைத்தேர்த‌ல்க‌ளை மீண்டும் ப‌ழைய‌ முறையில் ந‌டாத்த‌ பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ர் சும‌ந்ததிர‌ன் பிரேர‌ணை முன் வைத்திருப்ப‌து மாகாண சபை தேர்தல்களை நட‌த்த‌ விடாம‌ல் இழுத்த‌டிக்கும் ச‌தி முய‌ற்சியாகும் என‌ ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி தெரிவுத்துள்ள‌து.

இது ப‌ற்றி ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சியின் பிர‌தித்த‌லைவ‌ர் ம‌ழ்ஹ‌ர்தீன் மௌல‌வி தெரிவித்திருப்ப‌தாவ‌து,

2017ம் ஆண்டு ந‌ல்லாட்சியில் த‌மிழ் கூட்ட‌மைப்பு, முஸ்லிம் காங்கிர‌ஸ், ம‌க்க‌ள் காங்கிர‌ஸ் க‌ட்சிக‌ளின் ஒத்துழைப்புட‌ன் தொகுதிவாரி தேர்த‌ல் ச‌ட்ட‌ம் பாராளுமன்றில் நிறைவேற்ற‌ப்ப‌ட்டு மாகாண‌ ச‌பை தேர்த‌ல் இழுத்த‌டிப்பு செய்ய‌ப்ப‌ட்ட‌து.

இப்போது அதை ர‌த்து செய்து மீண்டும் ப‌ழைய‌ தேர்த‌ல் முறையை கொண்டு வ‌ர‌ சும‌ந்திர‌ன் முய‌ல்வ‌த‌ன் மூல‌ம் மீண்டும் தேர்த‌ல்க‌ள் ந‌ட‌க்காம‌ல் இழுத்த‌டிக்க‌ செய்யும் பேரின‌வாத‌ச் சிந்த‌னைக்கு சும‌ந்திர‌ன் ப‌லியாகியுள்ளாரா என‌ கேட்கிறோம்.

மாகாண சபை தேர்தல்கள் தொகுதி வாரியாக நடாத்தப்பட வேண்டும் என்பதுதான் எமது ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு.

சுமந்திரன் நினைப்பது போல மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு பாராளுமன்றத்தில் பொதுஜன பெரமுனை பாராளுமன்ற உறுப்பினர்களின் அனுமதி தேவை. அதற்கு மஹிந்த தரப்பு அனுபதி கொடுக்காது. 2017ம் ஆண்டின்ப‌டி தொகுதி வாரியாக மாகாண சபை தேர்தல் நடைபெறக் கோரிக்கை விடுத்தால் விரைவாக‌ தேர்த‌லை ந‌ட‌த்த‌ அர‌சுக்கு அழுத்த‌ம் கொடுக்க‌ முடியும்.

கிழக்கு மாகாணத்தில் அதிகமான முஸ்லீம் கட்சிகள் போட்டியிட்டால் கிழக்கில் அதிகமாக முஸ்லிம்கள் வெற்றி பெறுவார்கள் என்பது சுமந்திரனுக்கு தெரிந்ததால் தொகுதிவாரி தேவையில்லை. விகிதாசாரமே தேவை என்று ரணிலுக்கு ஒரு ஆலோசனை வழங்குகிறார் போலும்.

மீண்டும் ஜனாதிபதியாக வேண்டும் என்ற விருப்ப‌ம் உள்ள‌ ரணில் விக்கிரமசிங்க தமிழ் மக்களின் வாக்குகளுக்காக சும‌ந்திர‌னின் கருத்துக்களை விழுங்கவும் முடியாமல் கக்கவும் முடியாமல் தடுமாறுவ‌தாக‌ தெரிகிற‌து.

மாகாணசபை தேர்தலை நடத்த விடாமல் தமிழ் மக்களை ஏமாற்றுவதற்காக சுமந்திரன் ஆடுகிற ஒரு நாடகமே இது என்பதை தமிழ் மக்களும் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். பாராளுமன்றத் தேர்தலை தவிர அனைத்து தேர்தல்களும் தொகுதி வாரியாகவே நடத்தப்பட வேண்டும் என்பதுதான் எமது ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடாகும்.

இழுத்த‌டிக்கும் ச‌தி

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)