
posted 14th May 2023

அன்னாரின் இழப்பினால் தாங்கொணாத் துயரில் வாடும் அனைவருக்கும் தேனாரத்தின் ஆழ்ந்துள்ள அனுதாபங்கள்
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
இளம் கர்ப்பவதி பிரசவத்தின் பின்னர் பரிதாபமாக உயிரிழப்பு
மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் பாட்டாளிபுரக் கிராமத்தைச் சேர்ந்த சாந்தி இராஜகோபால் என்கின்ற 24 வயதுடைய இளம் கர்ப்பிணித் தாயொருவர் மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் குடும்ப நல உத்தியோகத்தர்களின் சீரானதும், நேர்த்தியானதுமான மருத்துவ சுகாதாரப் பராமரிப்புக்களின் பின்னர் நேற்று முன்தினம் (12) வெள்ளி அவர் பிரசவத்துக்காக மூதூர் தள வைத்திய சாலையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
எனினும் வைத்திய சாலை நிர்வாகம் விசேட பெண் நோயியல் வைத்திய நிபுணர் கடைமையில் இல்லை என்பதனையும் குறித்த கர்ப்பவதியின் உடல் நிலையின் பொருட்டும் பிறிதொரு விசேட வைத்திய நிபுணர் கடமையில் உள்ள வைத்திய சாலைக்கு மாற்றம் செய்யாமையின் காரணமாக நேற்று முற்பகல் அவர் மிக ஆபத்தான முறையில் குழந்தையினை பிரசவித்ததன் பின்னர் ஏற்பட்ட அதீத குருதிப் பெருக்கின் காரணமாக அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டதுடன் குழந்தை திருகோணமலை ஆதார வைத்திய சாலைக்கு அனுப்பப்பட்டதாகவும், பின்னர் தாயும் திருகோணமலை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்ட போதிலும், சிறிது நேரத்தில் சிகிச்சைகள் பயனின்றி பரிதாபமாக உயிரிழந்ததாகவும், வைத்திய சாலை வட்டாரத்திலிருந்து அறியமுடிகிறது.
இந்நிலையில் குறித்த பெண்ணின் மரணத்துக்கு நீதி கோரி குடும்பத்தினர் பொலீஸ் முறைப்பாட்டை மேற்கொண்டுள்ளதாகவும் போலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவத்தினால் பாட்டாளிபுரம் சோகத்தில் மூழ்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)