இந்திய வம்சாவளி மக்களின் எதிர்பார்ப்புகளை நிச்சயம் நிறைவேற்றுவோம் - ஜீவன் தொண்டமான்

உறவுகளின் துயர்பகிர - Special Offer

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

இந்திய வம்சாவளி மக்களின் எதிர்பார்ப்புகளை நிச்சயம் நிறைவேற்றுவோம் - ஜீவன் தொண்டமான்

மறைந்த அமரர் ஆறுமுகன் தொண்டமானின் மறைவோடு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பலவீனமடைந்து விட்டது என சிலர் விமர்சனங்களை முன்வைத்தனர். இருந்த போதும் காங்கிரஸ் இன்னமும் பலமாகவே உள்ளது. இதற்கு எமது தற்போதைய அரசியல் சிறந்த சான்று. இந்திய வம்சாவளி மக்களின் எதிர்பார்ப்புகளை நிச்சயம் நிறைவேற்றுவோம் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

நுவரெலியா மாவட்டத்தில் உள்ள தலவாக்கலை உப பிரதேச செயலகமும், நோர்வூட் உப பிரதேச செயலகமும் பிரதேச செயலகங்களாக 29.05.2023 திங்கள் கிழமை (29) முதல் தரமுயர்த்தப்பட்டு அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களால் திறந்த வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஸ்வரன், நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபொட, அம்பகமுவ மற்றும் நுவரெலியா பிரதேச செயலாளர்கள், உள்ளுராட்சி மன்ற செயலாளர்கள், கிராம, சமூர்த்தி, நலன்புரி ஆகியவற்றின் உத்தியோகத்தர்கள், கட்சி பிரமுகர்கள் மற்றும் அரச அதிகாரிகளும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

தரம் உயர்த்தப்பட்ட செயலகங்களை திறந்து வைத்த பின்னர் உரையாற்றிய அமைச்சர் ஜீவன் தொண்டமான் கருத்து தெரிவிக்கையில்;

கடந்த ஒரு வருடத்துக்கு முன்னர் உப செயலகத்தை திறந்து வைத்தபோது அதற்கு எதிராக விமர்சனங்கள் பலராலும் முன்வைக்கப்பட்டன.

பிரதேச செயலகம் கோரும் நிலையில் உப செயலகம் எதற்கு எனவும் கேள்விகள் அரசியல் வாதிகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் ஊடாக எழுப்பட்டன.

அந்த நேரத்தில் பிரதேச செயலகம் நிச்சயம் உருவாகும் என நாம் கூறினோம். அதனை இன்று செய்து முடித்து உள்ளோம். வழங்கிய வாக்குறுதிகளை நிறை வேற்றுவதும் சொல்வதை செய்வதும் தான் காங்கிரஸின் அரசியல் தந்திரமும் பலமாகும்.

ஆறுமுகம் தொண்டமான் மறைவோடு இராஜங்க அமைச்சு பதவி எமக்கு கிடைத்தபோது காங்கிரஸ் பலவீனம் அடைந்துவிட்டது என விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. நாம் அமைதி பேணிணோம். மறைந்த தலைவர் காட்டிய வழியில் நாம் செல்லுகின்றோம்.

தற்போதைய தலைவர் கிழக்கு மாகாண ஆளுநராக இருக்கின்றார். நான் தேசிய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த அமைச்சு பதவியை வகிக்கிறேன். ஆக இருந்ததை விடவும் காங்கிரஸ் பலமாகவே உள்ளது.

எமது இந்திய வம்சாவளி மக்களின் எதிர்பார்ப்புகளை நிச்சயம் நிறைவேற்றி வருவோம். அடுத்ததாக பல்கலைக்கழக விவகாரத்தையும் வெகு விரைவில் செய்து முடிப்போம் என்றார் தேசிய நீர் வடிகால் அமைச்சர் ஜீவன் தொண்டமான்.

இந்திய வம்சாவளி மக்களின் எதிர்பார்ப்புகளை நிச்சயம் நிறைவேற்றுவோம் - ஜீவன் தொண்டமான்

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)