
posted 21st May 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
ஆளுநர் தமிழர்
வடக்கு - கிழக்கு மாகாணசபை 1989ம் ஆண்டு தொடக்கம் 2023ம் ஆண்டு இன்று வரையும் கிட்டத்தட்ட 33 வருடங்களுக்குப் பின் 12ஆவது ஆளுநராக தமிழர் ஒருவர் ஜனாதிபதி அவர்களினால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர், ஈ.பி.ஆர்.எல்.எப். இராதுரைரெத்தினம் விடுத்துள்ள அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது,
தமிழர் ஒருவர் கிழக்கு மாகாணத்திற்கு ஆளுநராக நியமிக்கப்பட்டதென்பது தமிழர்களாகிய நாங்கள் வரவேற்றே ஆக வேண்டும். இவர் ஒரு சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவராக இருப்பதோடு கடந்த காலத்தில் இந்திய வம்சாவழித் தமிழர்கள் அடைந்த துன்ப துயரங்களை நீக்குவதற்கு தலைமை தாங்கிய குடும்பத்தில் ஒருவராவார். இவருக்கு நலிவடைந்த மக்களில் துன்ப துயரங்கள் மிகவும் வலுவாகத் தெரியும். துன்பப்பட்ட மக்களின் வலியை உணர்ந்தவர் என்ற வகையில் கிழக்கு மாகாண மக்களின் வலியை போக்குவார் என நம்புகின்றோம்.
நேற்றைய தினம் (20) தனது கடமைகளை பொறுப்பெடுத்திருந்தாலும் கூட கடமைகளை ஆரம்பித்ததென்பது கிழக்கு மாகாண நிருவாகத்தை மத்திய அரசு சார்பாக செயற்படுத்துவதற்கு ஊன்று சக்தியாக அமையும்.
கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் மூவின மக்களும் எவ்வளவு நல்லெண்ணங்களுடன் வாழ்கின்றார்களோ அதேபோல் மூவினங்களுக்குள்ளும் ஒரு சில விடயங்களில் முரண்பட்ட விடயங்களும் உண்டு.
ஆளுநரைப் பொறுத்தவரையில் கிழக்கு மாகாண சபைக்கு கடந்த காலங்களில் நியமிக்கப்பட்ட ஆளுநர்களில் சில சிறப்பான செயற்பாடுகளும், அதேவேளை மூவின மக்களும் முரண்படக்கூடியவாறு ஆளுநர்கள் நடந்து கொண்ட சம்பவங்களும் உண்டு.
குறிப்பாக, புதிய ஆளுநரைப் பொறுத்தவரையில் மாகாணங்களுக்குரிய அதிகாரங்களை விட்டுக் கொடுக்காமலும், நிதி ஓதுக்கீட்டின் போதும் முரண்பாடுகள் ஏற்படாமல் இருப்பதற்கும், உயர்பதவி நியமனங்கள், இடமாற்றக் கொள்கைகள், பதவி உயர்வுகள், புதிய நியமனங்கள் தொடர்பாக மிகவும் விழிப்பாகவும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக நிலையான கொள்கையின் கீழும் மதச் செயற்பாடுகளின் போதும் அனைத்து மதங்களும் ஏற்றுக்கொள்ளக் கூடியவாறும், மாகாண வளங்களை மாகாண மக்கள் பயன்படுத்தக் கூடியவாறும், புதிய திட்டங்களைத் தயாரித்து தேசிய ரீதியாகவும், சர்வதேச ரீதியாகவும் நிதிகளைப் பெற்றுக் கொள்வதற்கும், கிழக்கு மாகாணத்தின் கீழுள்ள நியதிச் சட்டங்கள் உருவாக்கப்பட்ட சபை நிருவாகங்களை சிறப்பாக செயற்பட வைப்பதற்கும் உதாரணப் புருசராக செயற்படுவார் என நம்புவதோடு, தற்சமயம் உள்ள ஐந்து சிரேஸ்ட செயலாளர்களில் ஒரு செயலாளர் மட்டும் தமிழராகவும், ஏனைய நான்கு செயலாளர்களையும் இரண்டு பதவிகளுக்கு அமர்த்தியும் ஏனைய பதவிகளுக்கு உத்தியோகத்தர்கள் இருந்தும் உதவியாகக் கூட நியமனம் செய்யப்படாமல் இருந்தது மகிழ்ச்சி அளிக்கவில்லை. இப்படிப்பட்ட விடயங்களை கடந்த ஆளுநர் விட்டுச் சென்றதும், 13ஆவது திருத்தச்சட்டத்தின் கீழ் அமுலாக்கப்பட வேண்டிய பல நிருவாகக் கடமைகளும் உள்ளது. இவை அனைத்தையும் சிறப்பாக செயல்படுத்துவார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)