
posted 29th May 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர - Special Offer
ஆறுமுகம் தொண்டமானின் நினைவாக முத்திரையும், கடித உறையும் வெளியீடு
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் தலைவரும் பொது செயலாளருமான ஆறுமுகம் தொண்டமானின் நினைவாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் விஷேட நினைவு முத்திரை மற்றும் கடித உறை என்பன திங்கள் கிழமை (29) ஜனாதிபதி அலுவலகத்தில் வெளியிடப்பட்டது.
வெகுசன ஊடகம் மற்றும் போக்குவரத்து அமைச்சர் பந்துல்ல குணவர்தனவினால் நினைவு முத்திரையும் கடித உறையும் ஜனாதிபதிக்கு வழங்கி வைக்கப்பட்டன.
இதன்போது பிரதமர் தினேஷ் குணவர்தன , சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன . முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ . முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய , தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் மற்றும் ஆறுமுகம் தொண்டமானின் மனைவி, திருமதி ராஜலட்சுமி தொண்டமான் ஆகியோருக்கும் நினைவு முத்திரையும் கடித உறையும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் தொண்டமானின் குடும்பத்தினர் தபால் மா அதிபர் மற்றும் முக்கிய அரசியல் தலைவர்களும் பலர் கலந்து கொண்டனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)