
posted 26th May 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
ஆராதனை அரங்கு அடிக்கல் நாட்டு விழா
சம்மாந்துறை கல்வி வலயத்துக்குட்பட்ட கமு /சது /வீரத்திடல் அல் - ஹிதாயா மகா வித்தியாலய ஆராதனை அரங்குக்கான அடிக்கல் நாட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.
கல்லூரி அதிபர் திருமதி ஏ.எம் முனாசிர் அவர்கள் நட்பிட்டிமுனை அல் - கரீம் பவுண்டேஷன் தலைவர் சி. எம். ஹலீம் அவர்களிடம் பாடசாலைக்கு அவசிய தேவையாக காணப்படும் ஆராதனை அரங்கின் தேவை குறித்து கேட்டுக் கொண்டதற்கு இணங்க அல் - கரீம் பவுண்டேஷன் அமைப்பானது இந்த அரங்கை அமைத்துக் கொடுப்பதற்காக இணக்கம் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது.
கல்லூரியின் அதிபர் திருமதி ஏ .எம். முனாசிர் தலைமையில் இன்று நடைபெற்ற அடிக்கல் நாட்டு விழா வைபவத்தில் அல் - கரீம் பவுண்டேஷன் பணிப்பாளர் சி. எம் ஹலீம் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார். நிகழ்வில் பாடசாலை முகாமைத்துவ குழு, ஆசிரியர்கள், மற்றும் அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், நலன்விரும்பிகள் என பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)