
posted 30th May 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர - Special Offer
அதிகவெப்பநிலை மக்கள் அவஸ்தை!
நாட்டில் வடக்கு, கிழக்கு உட்பட பல்வேறு மாகாணங்களிலும் மாவட்டங்களிலும் அதிகரித்த வெப்பநிலை கொண்ட காலநிலை நீடிப்பதால் பொது மக்கள் பெரும் அவஸ்த்தைக்கு உள்ளாகிவருகின்றனர்.
நாட்டின் வடக்கு, கிழக்க வடமத்திய, வடமேல் மாகாணங்களிலும் மொனறாகல, மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இத்தகைய அதிகரித்த வெப்ப கால நிலைகாணப்படுவதை வளி மண்டலவியல் திணைக்களம் உறுதி செய்துள்ளதுடன், இந்த நிலமையால் உடலின் வெப்பமும் அதிகரிப்பதால் பொது மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டுமெனவும் அறிவுறுத்தியுள்ளது.
இயலுமானவரை நீரை அருந்துதல், நிழலில் ஓய்வெடுத்தல், வெளிப்புற செயற்பாடுகளைக் குறைத்தல், மெல்லிய இலகுவான ஆடைகளை அணிதல் என்பவற்றினூடாகப் பாதிப்பைத்தவிர்க்க முடியுமெனவும் தெரிவிக்கப்பட்டுளள்து.
இதேவேளை கிழக்கில் இவ் வெப்பநிலை உயர்வின் காரணமாக குறிப்பாக வயோதிபர்கள், நோயாளர்கள் தாங்க முடியாது அவஸ்த்தையுறும் பெரும் பரிதாப நிலையும் ஏற்பட்டுள்ளது.
எனவே இவ் வெப்ப அதிகரிப்பினால் உடலில் ஏற்படும் தாக்கத்தைத் தணிக்க
கிழக்கில் மக்கள் தாக சாந்தி தரக் கூடிய இளநீர், நுங்கு, வெள்ளரிப்பழம் மற்றும் வோட்டமெலோன் போன்றவற்றினை அதிகமாக வாங்கிப் பாவிக்கின்றனர். இவ் வெட்கைக்க காலத்தில் பாலைப்பழ, வீரப்பழ சீஸனும் கிழக்கில் ஆரம்பமாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)