
posted 18th May 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
அகில இலங்கை சமாதான நீதவானாக அமுதன்
மன்னார் சின்னக்கடையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஜோசப் அமுதன் டானியல், அகில இலங்கை சமாதான நீதவானாக 15.05.2023 திங்கட் கிழமை மன்னார் மாவட்ட நீதிமன்ற நீதவான் முன்னிலையில் சத்தியப் பிரமானம் செய்துகொண்டார்.
திரு திருமதி அனிசிடஸ் பிரின்ஸ் தேவேந்திரன் ஜோசப், சகாயம் ஜோசப் ஆகியோரின் மகனாகிய அமுதன் யாதவா இந்து துவக்கப்பள்ளி (மீனாட்சிபுரம்), A..A.G..M மேல்நிலைப்பள்ளி (சங்கரபாண்டியபுரம்), காளிஸ்வரி உயர்நிலைப் பள்ளிகளின் (தமிழ்நாடு, இந்தியா) பழைய மாணவருமாவார்.
மன்னார் மாவட்ட செயலகத்தில் கரையோரம் பேணல் அபிவிருத்தி உத்தியோகத்தராக பணியாற்றிவரும் திரு. ஜோசப் அமுதன் டானியல் அரச சேவையில் 2006.01.02 இல் இணைந்தார்.
தமிழ், ஆங்கிலம், சிங்கள மொழிகளில் புலமையுள்ள அமுதன் ஆங்கிலத்தில் உயர் தேசிய டிப்ளமொ, கணணி அறிவியலில் இளமானி கற்கை(டீ.ளுஉ), பட்டப் பின் பட்டையக் கல்வி மற்றும் சமூகவியலில் முதுமானி கற்கை (M.A.) உட்பட 12 டிப்ளமோக்களையும் நிறைவு செய்துள்ளார்.
மேலும், இலங்கை திறந்த பல்கலைக் கழகத்தின் (யாழ் நிலையம்) சட்டபீட மாணவருமாவார். சமூக அக்கறையுடன் செயற்பட்டு வரும் இவர் விட்டுவிடுதலை காண், அக்குரோணி, அன்னயாவினும், ஒற்றையானை எனும் நான்கு நூல்களை வெளியிட்டுள்ளதுடன், சிறுகதை துறைக்கான வடமாகாண இளங்கலைஞர் விருது உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)