
posted 7th May 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
12 மில்லியன் பெறுமதியான ஐஸ் போதைப் பொருளுடன் மன்னாரில் இருவர் கைது
மன்னார் மதவாச்சி பிரதான வீதி விகும்புர பிரதேசத்தில் 12 மில்லியன் ரூபா பெறுமதியான ஐஸ் போதைப் பொருளுடன் இரண்டு சந்தேக நபர்கள் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட கார் ஒன்றும் இராணுவத்தினரால் நேற்று (6) மதியம் இரண்டு மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளது.
மன்னார் தள்ளாடி இராணுவப் புலனாய்வுப் பிரிவினர்க்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து மன்னாரிலிருந்து சென்ற குறித்த காரை பின் தொடர்ந்து சென்ற புலனாய்வுப் பிரிவினர் குஞ்சுக்குளம் அருகில் உள்ள விகும்புர பகுதியில் வாகனத்தை சோதனை செய்த போது வாகனத்தினுள் நூதனமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐஸ் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டது.
கைப்பற்றப்பட்ட ஐஸ் போதைப் பொருளின் பெருமதி 12 மில்லியன் ரூபா என்று தெரிவிக்கப்பட்டது.
கைது செய்யப்பட்டவர்கள் கல்பிட்டியை சேர்ந்த நபர் வயது (38) மற்றும் மன்னார் அடம்பனைச் சேர்ந்த (27) வயதுடைய நபர்கள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட ஐஸ் போதைப் பொருள் சந்தேக நபர்கள் மற்றும் வாகனம் உட்பட சான்றுப் பொருட்கள் அனைத்தும் மேலதிக விசாரணைகளுக்காக மன்னார் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்ட்டது

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)