
posted 9th May 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
வைத்தியரிடம் கத்தி முனையில் நகை பணம் கொள்ளை
நீண்ட காலமாக வைத்தியராக சேவையாற்றி அண்மையில் ஓய்வு பெற்ற வைத்தியர் ஒருவரின் கிளினிக் சென்ரரில் புகுந்த கொள்ளையர் கோஷ்டினர் கத்தி முனையில் 5.லட்சம் ரூபாவிற்கும் மேற்பட்ட பணம் மற்றும் நகைகளையும் கொள்ளையிட்டுச் சென்றுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் நானாட்டான் பிரதேசத்தில் அமைந்துள்ள புளியடி கிளினிக்கில் ஞாயிற்றுக்கிழமை (7) இரவு 9 மணிக்குப் பின் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது;
ஞாயிற்றுக் கிழமை (07) இரவு 9.மணிக்குப் பின் கிளினிக் வளாகத்தினுள் நுழைந்த இரண்டு பேர் சிங்களத்திலும், தமிழிலும் பேசிக் கொண்டு குறித்த வைத்தியரிடம் கத்தி முனையில் பணம் மற்றும் கையில் அணிந்திருந்த மோதிரம் மற்றும் குறித்த வீட்டில் இருந்த பெண்களின் நகை போன்றவற்றை கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக பொலிசில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
கொள்ளையர்களின் நடவடிக்கையினால் வைத்தியரின் மூக்குக் கண்ணாடி உடைந்ததில் வைத்தியருக்கு முகத்தில் காயங்களும் ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவந்தது.
சம்பவம் தொடர்பாக திங்கள் கிழமை (8) காலையில் பாதிக்கப்பட்ட வைத்தியரால் முருங்கன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது
இதேவேளை நானாட்டான் பிரதேசத்தில் தொடர்ச்சியாக பல திருட்டு சம்பவங்கள் நடைபெறுவதாக பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கப்படுவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)