
posted 12th May 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
வவுனியாவில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு
வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தின் முன்பாக முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செயற்றிட்டம் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரால் நேற்று (11) பிற்பகல் 1.30 மணியளவில் முன்னெடுக்கப்பட்டது.
இதன் பொழுது பொதுமக்களின் பங்களிப்புடன் பெறப்பட்ட அரிசியினை கொண்டு காய்ச்சப்பட்ட நிலையில் உயிர்நீத்த உறவுகளிற்கு ஈகைச் சுடரேற்றி ஒரு நிமிட அகவணக்கம் செலுத்தி முள்ளிவாய்க்கால் கஞ்சி தொடர்பான வரலாற்றினை தெளிவுபடுத்தும் துண்டுபிரசுரமும் மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டதோடு தொடர்ச்சியாக முள்ளிவாய்க்கால் கஞ்சியும் மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
இதன் பொழுது வவுனியா மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்கத்தினரும் இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)