
posted 23rd May 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
மோட்டார் சைக்கிள் விபத்தில் மரணம்
மட்டக்களப்பு - கொக்குவில், குப்பிளாமடு பிரதேசத்தில் மழைநீர் வழிந்தோடும் வடிகால் பள்ளத்தின் ஊடாக பிரயாணித்த மோட்டார் சைக்கிள் வீதியை விட்டுவிலகி மரத்துடன் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குப்பிளாமடு பிரதேசத்தைச் சேர்ந்த 53 வயதுடைய லோகிதராஜா கோவிந்தராஜா என்பவரே உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் நேற்று முன்தினம் இரவு 8.30 மணிக்கு மட்டக்களப்பில் இருந்து வீடு நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றபோது குப்பிளாமடு வீதியின் குறுக்கே மழைநீர் வழிந்தோடும் பள்ளத்தில் இருந்து மேலே செல்லும்போது மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி மரத்துடன் மோதியதில் சம்பவ இடத்திலே அவர் உயிரிழந்தார்.
உயிரிழந்தவரின் சடலம் பிரேதபரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்குவில் போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)