மூடப்பட்ட ச.தொ.ச. கிளையை மீளத்திறக்குக!

உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

மூடப்பட்ட ச.தொ.ச. கிளையை மீளத்திறக்குக!

அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த முக்கிய பிரதேசமான நிந்தவூரில் பதினைந்து வருட காலமாக இயங்கி கோட்டாபய அரசில் மூடப்பட்ட லங்கா ச.தொ.ச கிளையை மீளவும் திறந்து மக்களுக்குப் பயனளிக்க ஆவன செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் நிந்தவூர் மத்திய கிளை வர்த்தக, வாணிபத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தனவுக்கு அனுப்பி வைத்துள்ள மகஜர் ஒன்றில் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தியுள்ளது.

மத்திய கிளைத்தலைவர் ஏ.எல். ஆதம்பாவா, செயலாளர் யூ. ஆதம் கனி ஆகியோர் இணைந்து இந்த மகஜரை அனுப்பி வைத்துள்ளனர்.
மகஜரில் மேலும் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது,

“அம்பாறை மாவட்டத்தில் மிக முக்கிய பிரதேசமான நிந்தவூரில் சுமார் பதினைந்து வருடகாலமாக இயங்கி வந்த லங்கா ச.தொ.ச. கிளை கடந்த கோட்டாபய அரசு காலத்தில் நியாயமான காரணங்களின்றி அரசியல் பழிவாங்கலாக இழுத்து மூடப்பட்டது.

நிந்தவூர் பிரதேச மக்கள் மட்டுமன்றி அயல் பிரதேச பாமர மக்களும் பயன் பெற்று வந்த இந்த ச.தொ.ச. கிளை மூடப்பட்டமை இன்றைய காலகட்டத்தில் பெரும் பாதிப்பாகவே அமைந்துள்ளது. பொருளாதார நெருக்கடி மற்றும் வாழ்க்கைச் செலவு உயர்வு போன்ற பிரச்சினைகளில் சிக்கித் தவிக்கும் பிரதேச மக்கள் ஓரளவேனும் தமது நாளாந்த தேவையான அத்தியாவசியப் பொருட்களை ச.தொ.ச கிளைகள் மூலமே பெற்றுக்கொள்ளும் வாய்ப்பும் இருந்து வந்தது.

இன்றைய நெருக்கடி நிலையில் அத்தியவசியப் பொருட்களுக்கு அடிக்கடி விலைக் குறைப்பு செய்யும் அரசு, லங்கா ச.தொ.ச. கிளைகள் மூலம் விலைக் குறைப்பு செய்யப்பட்ட பொருட்களைப் பெற்றுக் கொள்ளலாமெனவும் அறிவுறுத்தி வருகின்றது.

எனினும் 15 வருடகாலமாக இயங்கி வந்த லங்கா ச.தொ.ச.வின் நிந்தவூர்க் கிளை மூடப்பட்டதால் பிரதேச நுகர்வோரான நிந்தவூர் மற்றும் அயல் பிரதேச மக்கள் குறித்த நிவாரணங்களை அனுபவிக்க முடியாத துரதிஷ்ட நிலையிலுள்ளனர்.

அத்துடன் வெளிச்சந்தையில் அதிக விலையிலேயே அத்தியாவசியப் பொருட்களுட்பட ஏனைய தேவைகளுக்குரிய பொருட்களையும் பெற்றுக்கொள்ள வேண்டிய அவலம் நீடித்து வருகின்றது.

எனவே, இன்றைய நிலையில் மக்களின் நிலமையை உணர்ந்தும், பிரதேச மக்களின் நலன் கருதியும் 15 வருடங்கள் இயங்கி பழிவாங்கலாக இழுத்து மூடப்பட்ட லங்கா ச.தொ.ச.வின் நிந்தவூர்க் கிளையை மீளவும் திறக்க தாமதமின்றி ஆவன செய்யுமாறு வினயமாகக் கோருகின்றோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூடப்பட்ட ச.தொ.ச. கிளையை மீளத்திறக்குக!

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)