
posted 26th May 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
முஸ்லிம் சமூகத்துக்கு பேரிழப்பாகும்
எமது சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் பிரதிச் செயலாளரும் தற்போதைய அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளருமான வை.எல்.எஸ். ஹமீதின் மரணச்செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக முஸ்லிம் காங்கிரஸ் பதில் பொருளாளர் ஏ.சி. யஹியாகான் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது;
முஸ்லிம் சமூகத்தில் விரல் விட்டு எண்ணக்கூடிய ஆளுமைகளில் ஒருவர் வை.எல்.எஸ். ஹமீத், சட்டத்துறையில் மட்டுமன்றி அரசியலிலும் அதிக அறிவும், ஆற்றலும், அனுபவமும் கொண்ட ஒருவர். முஸ்லிம் காங்கிரஸ் என்பது அவரது தாய்க் கட்சி. மாமனிதர் மர்ஹூம் அஷ்ரபோடு மிக நெருக்கமாக பழகிய ஒருவர். கட்சியை மக்கள் மயப்படுத்துவதில் மாமனிதர் அஷ்ரபுக்கு பக்கத் துணையாக நின்றவர்.
பின்னர், அகில இலங்கை மக்கள் காங்கிரஸை உருவாக்குவதில் முதன்மையாக நின்று செயற்பட்டார். கட்சி அரசியல் எவ்வாறாக இருந்த போதிலும் முஸ்லிம் சமுகத்துக்காக அதிகளவில் குரல் கொடுத்த சமூகப் பற்றாளன் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. உண்மையில் வை.எல்.எஸ். ஹமீதின் இழப்பு முஸ்லிம் சமுகத்துக்கு ஏற்பட்ட ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)