
posted 24th May 2023

அன்னாரின் இழப்பினால் தாங்கொணாத் துயரில் வாடும் அனைவருக்கும் தேனாரத்தின் ஆழ்ந்துள்ள அனுதாபங்கள்
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
முகமாலை பகுதியில் விபத்து - ஒருவர் பலி
ஏ 9 பிரதானவீதியில்- பளை முகமாலைப் பகுதியில் இன்று (24) புதன் காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார்.
இவ் விபத்து காலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. விபத்தில் யாழ்ப்பாணம் துன்னாலை பகுதியை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர்.
பருத்தித்துறையிலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த அரச பேருந்துடன், கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் உயிரிழந்ததுடன், அதில் பயணித்த சிறுவர்கள் இருவர் படுகாயமடைந்த நிலையில் பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பான விசாரணைகளை பளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)