மன்னார் தம்பவனி காற்றுச் சக்தி  செயற்திட்டத்தின் மேம்படுத்துவதற்கான திட்டத்துக்கு பல ஆயிரம் மக்கள் எதிர்ப்பு

உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

மன்னார் தம்பவனி காற்றுச் சக்தி செயற்திட்டத்தின் மேம்படுத்துவதற்கான திட்டத்துக்கு பல ஆயிரம் மக்கள் எதிர்ப்பு

மன்னார் தம்பவனி காற்றுச் சக்தி செயற்திட்டத்தின் முதலாம் கட்ட விரிவாக்கமாக கொள்ளளவை மேம்படுத்துவதற்கான திட்டம் முன்னெடுக்கப்படுவதால் இந்த உத்தேச செயற்திட்டத்தால் சுற்றாடலுக்கு ஏற்படும் தாக்கம் தொடர்பாக தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தலாம் என கரையோர பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமைத்துவ திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பொறியியலாளர் ஆர்.ஏ.எஸ். ரணவிக்க தெரிவித்திருந்த நிலையில் முதலாம் கட்ட விரிவாக்கமாக கொள்ளளவை மேம்படுத்துவதற்கான திட்டத்தக்கு எதிர்ப்பு தெரிவித்து பல ஆயிரம் பொது மக்கள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளதாக மன்னார் பிரஜைகள் குழு ஆளுநர் சபையில் தெரிவிக்கப்பட்டது.

1988 ஆம் ஆண்டின் 64 ஆம் இலக்க மற்றும் 2011 ஆம் ஆண்டின் 49 ஆம் இலக்க ஒழுங்கு விதிகளின் மூலம் திருத்தப்பட்ட 1981 ஆம் ஆண்டின் 57 ஆம் இலக்க கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமைத்துவ சட்டத்தின் 16 (1) ஆம் பிரிவின் நியதிகளுக்கு அமைவாக பத்தரமுல்ல, பெலவத்த, புதிய பாராளுமன்ற வீதி, இல. 754 எனும் முகவரியில் அமைந்துள்ள இலங்கை மின்சார சபையினால் மன்னார் தம்பவனி காற்றுச் சக்தி செயற்திட்டத்தின் கொள்ளளவை விரிவுபடுத்தப்பட இருப்பதாகவும், இம் முதலாம் கட்ட விரிவாக்கல் செயற்திட்டத்திற்கு சமர்பிக்கப்பட்ட சுற்றாடல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை பொது மக்களின் பரிசீலனைக்காக நகர அபிவிருத்தி மற்றும் வீட்டு அமைச்சு , கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமைத்துவ திணைக்களம், மத்திய சுற்றாடல் அதிகார சபை, வனவிலங்குகள் பாதுகாப்புத் திணைக்களம், மாவட்ட செயலாளர் அலுவலகம், பிரதேச செயலாளர் அலுவலகம், மாநகர சபை, பிரதேச செயலகம், கடற்தொழில், நீரியல் வளங்கள் திணைக்களம் ஆகியவற்றில் பொதுமக்களின் கருத்துக்களை 2023.02.22 ஆம் திகதி முதல் 30 நாட்களுக்குள் கரையோர பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமைத்துவ திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்துக்கு எழுத்து மூலமாக சமர்பிக்கும்படி வேண்டப்பட்டு இருந்தனர்.

இதற்கமைய மன்னார் மாவட்டத்திலிருந்து ஏழாயிரத்துக்கு மேற்பட்ட பொதுமக்கள் மன்னார் தம்பவனி காற்றுச் சக்தி செயற்திட்டத்தின் கொள்ளளவை விரிவுப்படுத்தப்பட வேண்டாம் என தங்கள் கையெழுத்துடன் கடிதங்கள் மற்றும் கையெழுத்துக்களும் இட்டு மன்னார் பிரஜைகள் குழுவினூடாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டள்ளதாக பிரஜைகள் குழுவின் மாதாந்த ஆளுநர் சபைக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட காலத்தில் இது தொடர்பாக தெரியப்படுத்தியுள்ளபோதும் இதற்கான பதில்கள் இன்னும் தங்களுக்கு கிடைக்கவில்லையெனவும் தெரிவிக்கப்பட்டள்ளது.

சனிக்கிழமை (13) மன்னார் மாவட்ட பிரஜைகள் குழுவின் மாதாந்த ஆளுநர் சபைக் கூட்டத்திலே இவ்விடயம் தொடர்பாக பிரஸ்தாபிக்கப்பட்டபோதே இக் கருத்து தெரிவிக்கப்பட்டது.

மன்னார் தம்பவனி காற்றுச் சக்தி  செயற்திட்டத்தின் மேம்படுத்துவதற்கான திட்டத்துக்கு பல ஆயிரம் மக்கள் எதிர்ப்பு

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)