மன்னாரில் 61 டெங்கு நோயாளர்கள்

உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

மன்னாரில் 61 டெங்கு நோயாளர்கள்

மன்னார் மாவட்டத்தில் இவ் வருடத்தின் ஐந்து மாதங்களில் இதவரைக்கும் 61 டெங்கு நோயாளர்கள் இனம் காணப்பட்டுள்ளதால் இவற்றை கட்டுப்படுத்தும் நோக்குடன் தீவிர நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட இருப்பதாக மன்னார் மாவட்ட தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு அதிகாரி வைத்திய கலாநிதி கதிர்காமநாதன் சுதாகர் தெரிவித்தார்.

மன்னார் மாவட்டத்தில் டெங்கு நோய் தொடர்பாக உயர் மட்ட அதிகாரிகளுடன் திங்கள் கிழமை (22) மாலை மாவட்டச் செயலகத்தில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி அ. ஸ்ரான்லி டிமெல் தலைமையில் ஆராயப்பட்டது.

இதன்போது வைத்திய கலாநிதி கதிர்காமநாதன் சுதாகர் தெரிவிக்கையில்;

தற்பொழுது நாட்டில் டெங்கு நோய் தாக்கம் அதிகரித்து வருவதனைக் கட்டுப்படுத்த நடவடிக்ககள் எடுக்கப்படவுள்ளது.

இதையிட்டு மன்னாரில் டெங்கு நோயின் ஆய்வின் அடிப்படையிலும், டெங்கு நோய் இனம் காணப்பட்ட நோயாளர்களின் பிரதேசங்களின் அடிப்படையிலும் மன்னார் பிரதேச செயலகப் பிரிவில் புதுக்குடியிருப்பு, எமில் நகர், பெரிய கமம், மூர் வீதி மற்றும் உப்புக்குளம் ஆகிய இடங்களில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதை முன்னிட்டு டெங்கு நோயைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் எதிர்வரும் 25ந் திகதி தொடக்கம் 27 ந் திகதி வரை நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக வைத்திய கலாநிதி கதிர்காமநாதன் சுதாகர் தெரிவித்தார்.

மன்னாரில் 61 டெங்கு நோயாளர்கள்

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)