
posted 25th May 2023

அன்னாரின் இழப்பினால் தாங்கொணாத் துயரில் வாடும் அனைவருக்கும் தேனாரத்தின் ஆழ்ந்துள்ள அனுதாபங்கள்
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
மக்கள் காங்கிரஸ் செயலாளர் காலமானார்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நாயகம் சட்ட முதுமாணி வை.எல்.எஸ். ஹமீட் இன்று வியாழன் (25) அதிகாலை தனது 61ஆவது வயதில் காலமானார்.
கல்முனையை பிறப்பிடமாகக் கொண்ட வை.எல்.எஸ். ஹமீட், கடந்த சில தினங்களுக்கு முன்னர் சுகவீனமுற்று, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே மரணித்துள்ளார். மூன்று பெண் பிள்ளைகளின் தந்தையான இவர், முன்னாள் வடக்கு, கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் காதர் முகைதீனின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது.
பயிற்றப்பட்ட ஆங்கில ஆசிரியராக கடமையாற்றி வந்த நிலையில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் 1989ஆம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டதில் இருந்து அவரது பிரத்தியேக செயலாளராகவும், 1994 ஆம் ஆண்டு அமைச்சுப் பதவியை பொறுபேற்றத்தில் இருந்து அவரது இணைப்புச் செயலாளராகவும் இவர் கடமையாற்றியுள்ளார். இவர் 2001 தொடக்கம் 2004 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினராகவும், பிரதிச் செயலாளர் நாயகமாகவும் பதவி வகித்திருந்தார்.
பின்னர் அக்கட்சியில் இருந்து விலகி, அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் எனும் கட்சியை ஸ்தாபித்து, றிஷாத் பதியுதீன் தலைமையில் அக்கட்சியின் செயலாளர் நாயகமாக செயற்பட்டு வந்தார். வர்த்தக, வாணிப, கைத்தொழில், அமைச்சின் ஆலோசகராகவும்,
இலங்கை கப்பல் கூட்டுத்தாபனம், அசோக் லேலண்ட் நிறுவனம் என்பவற்றின் தலைவராகவும் பதவிகளை வகித்திருக்கிறார்.
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிகளின் சார்பில் பாராளுமன்ற பொதுத் தேர்தல்களிலும் போட்டியிட்டுள்ளார்.
முஸ்லிம் சமூகத்தின் அரசியல் தொடர்பாக ஆழ்ந்த அறிவு மிக்கவராக திகழ்ந்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பு
உங்களது இரங்கல் செய்தி எமது இணையத் தளத்தில் செய்தியுடன் வர நீங்கள் விரும்பினால் எமது மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.
notices@thaenaaram.com
மின்னஞ்சலில் உங்கள் பெயர், இடம், யாருக்குரிய இரங்கல் செய்தி என்பவற்றினைக் குறிப்பிட மறக்க வேண்டாம்.
நன்றி.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)