
posted 23rd May 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
பொலிஸ் பரிசோதனை நிகழ்வு
நிந்தவூர் பிரதேச பொலிஸ் நிலையத்தில் கடமை புரியும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான பொலிஸ் பரிசோதனை நிகழ்வு, பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.எம்.எம். நஜீப் தலைமையில் இடம்பெற்றது. இதில் அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆர்.எம்.டீ.ஜே. ரத்நாயக்க கலந்து கொண்டு இப்பரிசோதனை நிகழ்வினை முன்னெடுத்தார்.
குறிப்பாக பொலிஸார் கடமை நேரத்தில் மக்கள் மத்தியில் நடந்து கொள்ளும் முறை பற்றியும், அவர்களின் ஆடை வடிவமைப்பு மற்றும் ஒழுக்க விடயங்களும் இப்பரிசோதனையின் போது சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரினால் பரிசீலிக்கப்பட்டது. மேலும், இந்த பரிசோதனை நிகழ்வானது நிந்தவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.எம்.எம். நஜீப்பின் வேண்டுகோளின் பிரகாரம் முதன் முறையாக முன்னெடுக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கதாகும்.
இதேவேளை இதில் சில குறைபாடுகளையுடைய பொலிஸ் உத்தியோகத்தர்கள், தங்களது குறைகளை நிபர்த்தி செய்து கொண்டு பணியாற்ற வேண்டும் என அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆர்.எம்.டீ.ஜே. ரத்நாயக்க பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கினார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)