பொதுநலவாய தலைவர்கள் மாநாட்டில் ஜனாதிபதி ரணில்

மூன்றாம் சாள்ஸ் மன்னரின் பங்கேற்புடன் வெள்ளிக்கிழமை (05) லண்டனில் நடைபெற்ற பொதுநலவாய தலைவர்கள் மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் அவரது பாரியார், மைத்திரி விக்கிரமசிங்க ஆகியோர் கலந்து கொண்டனர்.

இளையோரின் பங்கேற்பு மற்றும் கல்வி மறுசீரமைப்பு ஆகியவற்றுக்கு பொதுநலவாய அமைப்பு ஒத்துழைப்பு வழங்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி டிஜிட்டல் மயமாக்கல் ஊடாக தொடர்பாடல்களை வலுப்படுத்தி கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

அவர் கானா ஜனாதிபதியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டதோடு இந்த நிகழ்வுக்கு இணையாக நடைபெற்ற 'குசைநளனைந ஊhயவ' நிகழ்வில் பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்க கலந்துகொண்டார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பொதுநலவாய தலைவர்கள் மாநாட்டில் ஜனாதிபதி ரணில்

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)