பேசாலையில் துர்நாற்றம் வெளிவந்து கொண்டிருக்கும் பிரதான பஸ் தரிப்பிடம்

உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

பேசாலையில் துர்நாற்றம் வெளிவந்து கொண்டிருக்கும் பிரதான பஸ் தரிப்பிடம்

துர்நாற்றத்துக்கு முகம் கொடுக்க முடியாது தவிக்கும் பிரயாணிகள் மட்டுமல்ல அச்சூழலில் வந்து செல்லும் மக்களும் துர்நாற்த்தை சுவாசித்து நோய்களுக்கு உள்ளாகும் நிலையும் தொடருவாக பொது மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

பேசாலை பகுதி மன்னார் மாவட்டத்தில் சனத்தொகை நிறைந்த ஒரு கிராமம் மாத்திரமல்ல பல பாகங்களிலிருந்தும் இப் பகுதிக்கு வெளியார் வர்த்தக ரீதியாகவும் பொது மக்கள் இப்பகுதிக்கு தங்கள் முக்கிய தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்குடன் வந்து செல்லும் ஒரு பகுதியாகவும் இப் பகுதி காணப்படுகின்றது.

இவ்வாறு இங்கு வந்து செல்வோரின் போக்குவரத்து வசதிக்காக இன்றல்ல நேற்றல்ல நீண்ட காலத்துக்கு முன்பே ஒரு முக்கியமான இடத்தில் பஸ் தரிப்பிடம் அமைக்கப்பட்டு பயனுள்ளதாக இருக்கின்றது.

ஆனால், தற்பொழுது இவ்பஸ் நிலையத்திலிருந்து பிரயாணிகள் தங்கள் போக்குவரத்து சேவையில் தொடர்வதில் பெரும் அசௌரியங்களுக்கு உள்ளாகி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மன்னார் - தலைமன்னார் பிரதான வீதியில் பேசாலையின் முக்கிய பகுதியில் அதுவும் பிரதான தபாலகம், மரக்கறி , மீன் சந்தை, தேனீர் கடை போன்ற வர்த்தக நிலையங்கள் அமைந்துள்ள இவ்விடத்திலேயே இவ் பஸ் தரிப்பிடம் அமைந்துள்ளது

இவ் பஸ் நிலையத்தில் வெயில் மழை யாவற்றுக்கும் பிரயாணிகள் தங்கிச் செல்லும் வசதியுள்ள ஒரு தங்குமிடமாக பேசாலை புனித ஸ்நாபக அருளப்பர் மன்றம் நீண்ட காலத்துக்கு முன் புனரமைத்திருக்கின்றபோதும் தற்பொழுது இத் தங்குமடத்துக்குள்ளோ அல்லது அவ்வழியால் செல்வோரோ ஜீரணிக்க முடியாத நிலையில் இத் தங்குமிடத்திலிருந்து துர்நாற்றம் வெளிவந்து கொண்டிருப்பதாக புகார்கள் எழுந்து வருகின்றன.

ஆகவே, இது தொடர்பாக சமப்ந்தப்பட்டோர் உடன் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே பலரின் வேண்டுகோளாக இருக்கின்றது.

பேசாலையில் துர்நாற்றம் வெளிவந்து கொண்டிருக்கும் பிரதான பஸ் தரிப்பிடம்

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)