புதிய ஆளுநருக்கு வாழ்த்துக்கள்

உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

புதிய ஆளுநருக்கு வாழ்த்துக்கள்

கிழக்கு மாகாண ஆளுநராகப் புதிதாகப் பதவி ஏற்றுள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டானுக்குப் பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருவதுடன், அவரது நியமனத்தை வரவேற்றுமுள்ளனர்.

குறிப்பாக தமிழ், முஸ்லிம் அரசியல் தலைவர்கள், கிழக்கின் பொது அமைப்புக்கள், மற்றும் தொழிற் சங்கங்கள், அவரது ஆளுநர் நியமத்தை வரவேற்றுள்ளதுடன், வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றன.

இதேவேளை சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், புதிய ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு தொலைபேசி மூலம் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

இதன் போது கிழக்கு மாகாணத்தில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பில் எதிர்காலத்தில் தீர்க்கமான முடிவுகளை எட்டுவதற்கு இருவுரும் இணைந்து செயற்படவும் இணக்கம் காணப்பட்டது.

அத்துடன் கிழக்கு மாகாணத்திலுள்ள தமது கட்சிப் பிரதி நிதிகள் சகிதம் விரைவில் தாம் ஆளுநருடன் சந்திப்பொன்றை மேற்கொள்ளவுள்ளதாகவும் ரவூப் ஹக்கீம் இதன் போது தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும், திகாமடுள்ள மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், கிழக்கு மாகாண புதிய ஆளுநர் செந்தில் தொண்டமானை ஜனாதிபதி செயலகத்தில் வைத்து சிநேக பூர்வமாகச் சந்தித்து வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.

அமரர் சௌமிய மூர்த்தி தொண்டமான் அவர்களை நினைவு கூர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் இதன் போது மலையக மக்கள் பற்றியும் உரையாடினார்.

தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் மத்தியில் ஒற்றுமையையும், சகோதரத்துவத்தையும் ஏற்படுத்தி, கிழக்கு மாகாணம் சிறந்து விளங்க புதிய ஆளுநர் பயணிக்க வேண்டிய நேரிய பாதைகள் தொடர்பான ஆலோசனைகளையும் இந்த சந்திப்பின் போது நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் தெரிவித்தார்.

புதிய ஆளுநருக்கு வாழ்த்துக்கள்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)