
posted 8th May 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
பிரச்சனைகள் தலைதூக்க இராணுவமயமாக்கலே காரணம்
வடக்கு கிழக்குப் பகுதிகளில் பிரச்சனைகள் தலைதூக்கப்படுவதன் முக்கிய காரணம் இராணுவமயமாக்கலே ஆகும். ஆகவே எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ச்சியாக ஒரே குரலில் பாராளுமன்றத்தில் குரல் எழுப்ப வேண்டும் என சமூக சேவையில் ஈடுபட்டுவரும் அருட்பணி சூ. ஜெயபாலன் குரூஸ் அடிகளார் தெரிவித்தார்.
சனிக்கிழமை (06) மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற வன்னி பாராளுமன்ற உறுப்பினர்கள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கும் இடையே நடைபெற்ற கருத்து பரிமாற்றத்தின்போதே அருட்பணி சூ. ஜெயபாலன் குரூஸ் அடிகளார் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அருட்பணி சூ.ஜெயபாலன் குரூஸ் அடிகளார் இங்கு தொடர்ந்து தெரிவித்ததாவது;
இந்த கலந்துரையாடலில் மீன்பிடி, விவசாயம் , கால்நடை போன்ற விடயங்களின் பிரச்சனைகளை மிகவும் தெளிவாக இங்கு கலந்து கொண்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தெரிவித்துள்ளனர்.
இக் கூட்டம் மிகவும் ஆரோக்கியமாக நடைபெற்றுள்ளது. இதையிட்டு மகிழ்ச்சி கொள்ளுகின்றேன்.
பிரச்சனைகளை மட்டுமல்ல, இதற்கான தீர்வுகள் என்ன என்பதையும் இங்கு கருத்துக்கள் தெரிவித்தவர்கள் மிகவும் சிறந்த முறையில் தெரிவித்ததையும் நோக்கக்கூடியதாக இருந்தது.
இங்குள்ள பிரச்சனைகளுக்கு முக்கியமான காரணமாக இருப்பது பௌத்தமயமே என இந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், இந்த பௌத்தமயமாக்களுக்கு காரணம் இராணுவமயமே என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். வடக்கு கிழக்குப் பகுதிகளில் தேவைகளுக்கு அதிகமாக இராணுவம் நிலை கொண்டு ஒரு நாடுகளிலும் இல்லாதவாறு இவர்கள் சிவில் விடயங்களிலும், மக்களின் சொந்த விடயங்களிலும் தலை போடுகின்றனர்.
எந்த நாடுகளிலும் மக்கள் பிரச்சனைகளை தீர்ப்பதில் பொலிசாரே செயல்படுகின்றனர். ஆனால், வடக்கு கிழக்குப் பகுதிகளில் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு நிலை கொண்ட இராணுவம் யுத்தம் முடிந்து பல வருடங்கள் கடந்தும் இன்றும் வட - கிழக்குப் பகுதிகளில் உள்ள இராணுவ முகாம்கள், இராணுவ கட்டளைத் தளங்கள் எத்தனை என்று அனவருக்கம் தெரியும்.
இன்று தென் பகுதியைவிட வடக்கு கிழக்குப் பகுதிகளில்தான் இராணுவ முகாம்கள் பெருந் தொகையாக அமைக்கப்பட்டள்ளன. இவற்றைபற்றிய உண்மை நிலைமையினை பாராளுமன்றத்தில் எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒரே குரலில் குரல் கொடுக்க வேண்டும்.
ஏனென்றால் இந்த இராணுவமயமாக்கலால்தான் பிரச்சனைகள் தலைதூக்கப்படுகின்றன என்பது பலரும் உணர்ந்து வருகின்றனர் என தெரிவித்தார்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)