
posted 21st May 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்தப் பெருவிழா ஆயத்த ஒழுங்குகள் ஆரம்பம்
எதிர்வரும் ஓகஸ்ட் 21ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த பெருவிழாவிற்குரிய ஆயத்த நடவடிக்கைகளாக ஆலய சூழல் பராமரிப்பு, ஆலயத்திற்கு வரும் பக்தர்களுக்கான அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்தல், வீதி தடைகள் அமைத்து சீரான போக்குவரத்துக்கு வழிசெய்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபடும் யாழ் மாநகரசபையினருக்கு ஆலய சம்பிரதாய முறைப்படி நேற்றைய (20) சனி தினம் பெருவிழா நாட்காட்டி அடங்கிய காளாஞ்சி ஆலயத்தினரால் கையளிக்கப்பட்டது.
இந்த வைபவத்தின் போது பாரம்பரிய முறைப்படி யாழ் மாநகரசபை வளாகத்தில் வாழை, தோரணங்கள் கட்டி அலங்காரம் சிறப்பாக அமையப் பெற்றிருந்தது.
இவ் வருடாந்த பெருவிழாவானது எதிர்வரும் ஓகஸ்ட் 21ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து இருபத்தைந்து தினங்கள் நடைபெறவுள்ளதென்பதும் குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)