
posted 17th May 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
நடமாடும் சேவை
கல்முனை பிரதேச செயலகத்தின் பொது மக்கள் நடமாடும் சேவை நேற்று புதன்கிழமை பிரதேச செயலாளர் ஜே. லியாக்கத் அலி தலைமையில் இடம்பெற்றது.
இந்நடமாடும் சேவையில் காணி, சமூக சேவைகள், சமூர்த்தி, மோட்டார் போக்குவரத்து, திட்டமிடல், கலாசாரம், மகளிர் அபிவிருத்தி, தேசிய அடையாள அட்டை, பொலிஸ், தேசிய வீடமைப்பு அதிகார சபை, பதிவாளர் திணைக்களம் ஆகிய பிரிவுகளுடன் தொடர்புபட்ட பொது மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகள் வழங்கி வைக்கப்பட்டன.
அத்துடன் சிலருக்கு முதியோர் அட்டைகள் வழங்கி வைக்கப்பட்டதுடன் அங்கவீனமுற்ற நபர் ஒருவருக்கு சக்கர நாட்காலியும் இயலாமை நிலையிலுள்ள முதியோர்களுக்கு ஊன்றுகோல்களும் வழங்கி வைக்கப்பட்டன.
இதன்போது மருதமுனை சுனாமி வீட்டுத் திட்டத்தில் எஞ்சியுள்ள வீடுகளை வழங்குவதற்கு பயனாளர்களை தெரிவு செய்வதற்கான நேர்மூகப் பரீட்சையும் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கல்முனை பிரதேச செயலக கணக்காளர் யூ.எல். ஜவாஹிர், உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம். ஜெளபர், கல்முனை, பெரியநீலாவணை பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஏ.ஆர்.எம். சாலீஹ், நிருவாக கிராம உத்தியோகத்தர் எம்.எச். ஜனூபா உட்பட உத்தியோகத்தர்கள் பலரும் பங்கேற்றிருந்தனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)