
posted 17th May 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
தொடரும் சட்ட விரோத மண் அகழ்வு
குடத்தனை கிழக்கு சுடலைக்குள் சீருடையுடன் மணல் அகழ்வு தொடர்சியாக இடம் பெறுவதாக பருத்தித்துறை பொலீசாருக்கு இளைஞர்கள் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த மணல் ஏற்றிய ரிப்பர் ரக் வாகனம் கைப்பற்றப்பட்டதுடன் சாரதியும் சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரும் ரிப்பர் வாகனமும் பருத்தித்துறை பொலீசாரால் நீதிமன்றில் முற்படுத்தப் படவுள்ளதாக பருத்தித்துறை பொலீஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)