
posted 11th May 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
டெங்கு ஒழிப்பு தொடர்பான கலந்துரையாடல்
டெங்கு ஒழிப்பு தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இன்று (11) கிளிநொச்சியில் இடம்பெற்றது.
குறித்த கலந்துரையாடல் இன்று வியாழன் பிற்பகல் 2 மணியளவில் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன்போது, மாவட்டத்தில் டெங்கு பரவலை கட்டுப்படுத்தல் மற்றும் துளம்பு பெருகும் இடங்களை பிரதேச செயலாளர் பிரிவுகள் எனும் அடிப்படையில் துப்பரவு செய்தல் உள்ளிட்ட விடயங்கள் பேசப்பட்டது.
மேலும், எதிர்வரும் 15ம் திகதி கரைச்சி பிரிவில் உள்ள அனைத்து அமைப்புக்கள், திணைக்களங்கள், தொழிற்சாலைகள் அனைத்தையும் ஒன்றாக்கி சிரமதானம் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டதாக அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)