
posted 24th May 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
சறுக்கிய சட்டத்தரணி
திருகோணமலை சண்முகா மகளிர் வித்தியாலய முஸ்லிம் ஆசிரியையின் அபாயா சம்பந்தமான வழக்கு சமாதானமாக முடிவுக்கு வந்திருப்பது வரவேற்புக்குரியதாக இருந்தாலும், நீதிமன்றம் மூலமே இதற்கு முடிவு காணப்பட்டது என்பது தமிழ், முஸ்லிம் உறவுக்கு கிடைத்த அவமானமாகும் என ஐக்கிய காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
இது பற்றி கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீட் மௌலவி தெரிவித்திருப்பதாவது,
கடந்த நல்லாட்சி அரசில் மேற்படி சண்முகா வித்தியாலய ஆசிரியை தனது கலாச்சார ஆடையான அபாயா அணிந்து செல்வதற்கு தடை விதிக்கப்பட்டார். அப்பொழுது இது விடயத்தை அரசியல் ரீதியாக வென்று தருவோம் என அன்றைட அரசின் பங்காளியான திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூபும் முஸ்லிம் காங்கிரசின் சில பாராளுமன்ற உறுப்பினர்களும் சொல்லியிருந்தனர். ஆனால் அவர்களால் ஆசிரியைக்கு இடமாற்றம் கொடுக்க முயற்சிக்கப்பட்டதே தவிர இது விடயத்தில் நீதி பெற்றுக்கொடுக்க முடியவில்லை.
ஆசிரியையை இடம் மாற்றுவது இதற்கு தீர்வல்ல என்றும் கலாசார ஆடை அணிவதற்குள்ள சட்டத்தை அமுல் படுத்த வேண்டும் என நாம் கட்சி என்ற வகையில் கூறினோம்.
மேற்படி அபாயா பிரச்சினையில் அன்று அமைச்சராக இருந்த மனோ கணேசனும் இனவாதமாக, அபாயாவுக்கெதிராக பேசினார்.
பின்னர் மு. காவினர் இந்த ஆசிரியை அழைத்துக்கொண்டு போய் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமை காண வைத்த போது வழமை போல் விட்டேனா பார் நிச்சயம் தீர்வு என அந்த ஆசிரியை அவரும் ஏமாற்றியது மட்டுமே முடிந்தது.
ஆனாலும் மேற்படி ஆசிரியையின் தொடர் போராட்டமும் இளம் சட்டத்தரணிகளின் அர்ப்பணிப்பின் காரணமாகவும் நமது நாட்டின் நீதித்துறையின் நீதி காரணமாகவும் இவ்வழக்கில் வெற்றி கிடைத்துள்ளது.
இந்த வழக்கில் சண்முகா தரப்பில் ஆஜரான சுமதிரன் எம் பி அவர்கள் இந்த வழக்கில் தன் தரப்புக்கு வெற்றி கிடைக்காது என்பதை புரிந்து அபாயாவுக்கு சார்பாக சமாதானத்துக்கு வந்துள்ளார்.
உண்மையில் அபாயா பிரச்சினையை வைத்து இரு சமூகங்களுக்குமிடையில் பிரச்சினை உருவாக கூடாது என திரு. சுமந்திரன் உளப்பூர்வமாக நினைத்திருந்தால் வழக்கின் ஆரம்பத்திலேயே இதனை சுமுகமாக முடித்திருக்கலாம்.
நாம் அறிந்த வரை சுமந்திரன் எம்பி சட்டத்தரணியாக சறுக்கிய, தோற்ற விடயம் முஸ்லிம் பெண்களின் அபாயாவில்தான்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)