
posted 30th May 2023

இவ்விளம் வயதினில் சாதனைபடைத்த மதுஸிகனுக்கு தேனாரத்தின் வாழ்த்துக்கள்
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர - Special Offer
சாதனை படைத்துள்ளார் மாணவன்
மட்டக்களப்பு – புனித மிக்கேல் கல்லூரி மாணவனான தேவேந்திரன் மதுஸிகன் பாக்குநீரிணையை நீந்திக் கடந்து சாதனை படைத்துள்ளார்.
அதிகாலை 1 மணியளவில் தனுஷ்கோடியிலிருந்து தலை மன்னாரை நோக்கி தனது நீச்சல் பயணத்தை ஆரம்பித்த மதுஸிகன், பிற்பகல் 03.05 மணியளவில் தலைமன்னாரை வந்தடைந்தார்.
தலை மன்னாரை வந்தடைந்த மதுஸிகனை, மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தம் கருணாகரன், மட்டக்களப்பு மற்றும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர்கள், மட்டக்களப்பு மாவட்ட சாரணர் சங்க பிரதிநிதிகள், முன்னாள் நடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் உட்பட பலரும் வரவேற்றதுடன், குறித்த மாணவனுக்கு பலர் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)