
posted 7th May 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
சந்நிதியான் ஆச்சிரமத்தால் ஏழு மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கிவைப்பு
யாழ்ப்பாணம் வடமராட்சி செல்வச் சந்நிதியான் ஆச்சிரமத்தால் மேலும் 357,000 ரூபா பெறுமதியான துவிச்சக்கர வண்டிகள் ஏழு மாணவர்களுக்கு வெள்ளி அன்று 05/5/2023 வழங்கப்பட்டுள்ளது.
சந்நிதியான் ஆச்சிரமத்தால் வாராந்தம் நடாத்தப்படும் சிறப்பு சொற்பொழிவு நிகழ்வில் வைத்தே துவிச்சக்கர வண்டிகள் வழங்கிவைக்கப்பட்டன.
கலைமதி வீதி, புத்தூரை சேர்ந்த தரம்-07 மாணவிக்கும், வட்டுவினி ஒழுங்கை, இணுவில் மேற்கை சேர்ந்த தரம்-10 மாணவிக்கும், பொன்னாலை தெற்கு, பொன்னாலையை சேர்ந்த யாழ் பல்கலைக்கழக மாணவிக்கும், ஊரெழு மேற்கு, சுன்னாகத்தை சேர்ந்த உயர்தர மாணவனுக்கும், புத்தூர் கிழக்கு, புத்தூரை சேர்ந்த தரம்-09 மாணவனுக்கும், புன்னாலைக்கட்டுவன், சித்திவிநாயகர் பாடசாலையில் கல்வி கற்கின்ற தரம் - 10, தரம் - 8 ஆகிய இரு மாணவர்களுக்குமே இவ்வாறு வழங்கி வைக்கப்பட்டன.
இதே வேளை இந்தியா கோயம்புத்தூர் சைவசித்தாந்த பேராசிரியர் திரு.மீ. சிவசண்முகம் அவர்கள் சிறப்பு சொற்பொழிவாற்றினார்.
இச் செயற்றிட்ட உதவிகளை கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள், இந்தியா கோயம்புத்தூர் சைவ சித்யாந்த பேராசிரியர் மீ சண்முகம், ஆச்சிரமத் தொண்டர்கள் வழங்கி வைத்ததன் இந்நிகழ்வில் சந்நிதியான் ஆச்சிரம நிர்வாகிகள், தொண்டர்கள், அடியார்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)