
posted 30th May 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர - Special Offer
கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கை
உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை அரசாங்கம் முற்றாகக் கைவிட வேண்டும் என்று கோரி கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கை கடந்த வெள்ளிக்கிழமை (26) காத்தான்குடியிலுள்ள ஜும்ஆப் பள்ளிவசல்களில் நடைபெற்றது.
காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இந்த கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கை நடைபெற்றது.
இந்த நடவடிக்கையின் போது பெருந்தொகையான முஸ்லிம் மக்கள் ஆர்வத்துடன் கையெழுத்திட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)